'’இது ஒரு போர்க்களம்; என் பலம் நீங்கள்'.. உடல்நலம் பற்றி நடிகை சமந்தா எமோஷனல் பேட்டி!

கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் மூத்தத் இயக்க தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் மூவிஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். ‘மெலோடி பிரம்மா’ மணிஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் … Read more

ரூ.100 கோடி வசூலித்த சர்தார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'. கார்த்தியுடன் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். கார்த்தி, தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் தண்ணீர் மாபியாவுக்கும் உளவாளிக்கும் இடையிலான மோதலை சொன்னது. படம் பற்றி கலவையான விமர்சனம் இருந்ததாலும் வசூலில் சாதனை படைத்தது. உடன் வெளியான பிரின்ஸ் படத்தின் தோல்வி சர்தாருக்கு சாதகமாக அமைந்தது. 40 … Read more

சிவகார்த்திகேயன் படத்தில் புதிதாக இணைகிறார் புஷ்பா பட வில்லன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் பிரபல தெலுங்க பட நடிகர் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை. கதையில் புதுமை ஏதும் இல்லாததால் படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் … Read more

புனித் ராஜ்குமார் படத்திற்கு கட்டணம் குறைப்பு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம். கந்ததாகுடி. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிகளையும், அதன் அழகையும் காட்சிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தை புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வின் புனித்ராஜ்குமார் தயாரித்திருந்தார். இதனை அமோகவர்ஷா இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். கர்நாடக அரசு படத்திற்கு வரிவிலக்கு அளித்தது. இந்த நிலையில் படத்தின் கட்டணத்தை குறைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வின் புனித் ராஜ்குமார். இது … Read more

"அர்ஜுனால் நான் மன அழுத்தத்துக்கு உள்ளானேன்!" – சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விஸ்வக் சென்

90களின் தொடக்கத்திலிருந்தே முக்கியமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இயக்குநராகவும் சில படங்களை இயக்கியவர். இவர் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்குப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகரான விஸ்வக் சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் படப்பிடிப்பிற்குச் சரியாக வரவில்லை என்று கூறி படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின.  அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “என் மகள் ஐஸ்வர்யாவைத் … Read more

நகை கடை கொள்ளையை படமாக்கும் பெண் இயக்குனர்

மேட்னி பிளோக்ஸ் நிறுவனம் சார்பில் பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் படம் ஆதாரம். அறிமுக இயக்குனர் கவிதா இயக்குகிறார். புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கவிதா கூறியதாவது: நம் கண் பார்க்கும் விசயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பார்த்த அனைத்தையும் சேமித்து வைக்கும் … Read more

சமந்தா எதையும் வெளிக்காட்டியது இல்லை : உன்னி முகுந்தன்

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவரிடம் நலம் விசாரித்து வருவதுடன் அவர் விரைவில் குணம்பெற பிரார்த்தித்தும் வருகின்றனர். இந்த நிலையில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் உன்னி … Read more