உடல்நிலை பற்றி கண்ணீருடன் பேட்டியளித்துள்ள சமந்தா

நடிகை சமந்தா தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்தார். சமந்தா நடித்துள்ள 'யசோதா' படம் தமிழ், தெலுங்கில் இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. வெளியில் சென்று இப்படத்திற்காக புரமோஷன் செய்ய முடியாது என்பதால் தமிழ், தெலுங்கில் படத் தயாரிப்பு நிறுவனமே சமந்தாவின் பேட்டி ஒன்றை எடுத்து அதை யு டியூபில் வெளியிட்டுள்ளது. தெலுங்கு பேட்டியில் தன்னுடைய உடல்நிலை குறித்து கண்ணீருடன் … Read more

ஜெயமோகன் கதையை தழுவி வெளியாகும் 'ரத்த சாட்சி'

ஆஹா தமிழ் ஓடிடி மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ரத்தசாட்சி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளரும், சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ரத்த சாட்சி திரைப்படம் உருவாகியுள்ளது. ஜெயமோகனின் இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்குவதில் பிரபலமான பல தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டினர் என்று ஜெயமோகன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயமோகன், “‘ரத்தசாட்சி’ திரைப்படம் … Read more

அடுத்தடுத்து 'பார்ட்டிகள்' : களை கட்டிய தமிழ் சினிமா

கோலிவுட் திடீரென பாலிவுட் ஆகிவிட்டதோ என சமீபத்தில் நடந்த இரண்டு 'பார்ட்டிகள்' திரையுலகத்தில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இரண்டு பார்ட்டிகளுமே மிக முக்கியமான பார்ட்டிகள் என்பதுதான் அதற்குக் காரணம். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றியைக் கொண்டாட அதன் படக்குழுவினர் கடந்த சனிக்கிழமையன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அந்த நிகழ்வில் கூட படத்தின் சில நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், அன்று இரவு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர … Read more

பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் யோகிபாபு ?

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பல தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு, அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் ஹிந்திப் படமான 'ஜவான்' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து பிரபாஸ் தற்போது நடித்து வரும் புதிய பான் இந்தியா படம் ஒன்றிலும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இயக்கத்தில் … Read more

'அரபிக் குத்து' சாதனையை முறியடிக்க முடியாத 'ரஞ்சிதமே'

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களின் முதல் சிங்கிள் பாடல், அல்லது மற்ற பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யு-டியுபில் பெரிய சாதனையைப் படைக்கும். அவரது படங்களின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அவரது புதிய படங்களின் பாடல்கள் அவருடைய முந்தைய பட பாடல்களின் சாதனைகளை எப்படியும் முறியடித்துவிடும். ஆனால், 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக சமீபத்தில் வெளிவந்த 'ரஞ்சிதமே' பாடல் முந்தைய சாதனைகளை முறியடிக்காமல் பின் தங்கிவிட்டது. 'ரஞ்சிதமே' பாடல் 24 … Read more

நான் இருந்தால் படம் ஹிட்! பரோல் பட விழாவில் பேசிய நாஞ்சில் சம்பத்!

‘காதல் கசக்குதய்யா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான துவாரக் ராஜா, தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.  தனது முதல் படத்தில் முழுக்க காதல்-மோதல் என காதலர்களுக்குள் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தார்.  தனது இரண்டாவது படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு க்ரைம் த்ரில்லர் படமான ‘பரோல்’ படத்தை இயக்கியுள்ளார்.  TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இப்படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, வினோதினி வைத்தியநாதன், கல்பிகா கணேஷ் … Read more

சமந்தாவைப் பாராட்டும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'யசோதா' படம் இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக தனது உடல்நிலையையும் மீறி ஒரு நாளை ஒதுக்கியுள்ளார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் சமந்தா தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தாலும் 'யசோதா' படத்திற்காக அவர் புரமோஷன் செய்கிறார். நேற்று இது குறித்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “எனது நல்ல நண்பர் ராஜ் சொல்வது போல, … Read more

இடைவெளிக்குப் பிறகு 'செப்' ஆக களமிறங்கும் அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் கதாநாயகியாக நடித்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 'பாகமதி, சைலன்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது. 'சைலன்ஸ்' படம் கூட தியேட்டர்களில் வெளியாகாமல் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு அனுஷ்கா பற்றிய செய்திகள் கூட ஊடகங்களில் அதிகம் வராமல் இருந்தது. சில படங்களில் … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தமா? என்ன நடந்தது?

‘மண்டேலா’ படத்தின் பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்தின் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது, ஆனால் படம் தொடங்கிய வேகத்திலேயே படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது.  சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் மடோன் அஷ்வின் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தான் மாவீரன் படம் கைவிடப்படுகிறது என்று தகவல்கள் கூறப்பட்ட நிலையில் மழை பெய்வதன் காரணமாகவே மாவீரன் படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக மற்றொரு செய்தி வெளியானது.  … Read more