பதான் படத்திற்காக ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்ற ஷாருக்கான் – தீபிகா

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பேஷ்ரங் என்கிற பாடல் பரபரப்பான சர்ச்சையை கிளப்பியதுடன் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறும்போது, தான் எப்போதும் படங்களில் சண்டைக் காட்சியை … Read more

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்!

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையைத் தரக்கூடிய  நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தற்போது 2023-ல் தன்னிடம் உரிமம் இருக்கக்கூடிய 16 தெலுங்கு படங்களின் லைன்- அப் மற்றும் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர், இல்லத்திரைகளிலும் இந்தப் படங்கள் மக்களை மகிழ்விக்க இருக்கிறது. திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை பார்த்து ரசித்த மக்கள் தற்போது வீட்டிலும் பார்த்து ரசிக்க இருக்கிறார்கள்.  சங்கராந்தி பண்டிகையை ஒட்டி இந்த புதிய 16 படங்களின் டைட்டில் க்ளிம்ப்ஸை … Read more

ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் அஞ்சலி

கடந்த 15 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் தாக்குப்பிடித்து நிற்கும் வெகு சில கதாநாயகிகளில் நடிகை அஞ்சலியும் ஒருவர். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அஞ்சலி கடந்தாண்டு பால்ஸ் என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படத்திலும் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் அஞ்சலி. ஏற்கனவே மலையாளத்தில் 2010ல் பையன்ஸ், 2018 இல் ரோசாப்பூ என இரண்டு படங்களில் நடித்துள்ள அஞ்சலி தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள … Read more

மம்முட்டி பட இயக்குனரை உள்ளே அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாகம்

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். அதைத்தொடர்ந்து பிரித்விராஜ் நடித்த அன்வர், சமீபத்தில் மீண்டும் மம்முட்டியின் நடிப்பில் வெளியான பீஷ்ம பர்வம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியின் டைரக்டர் ஆன சங்கர் மோகன் … Read more

எப்போதும், எப்போதும் அஜித் ரசிகர் – 'துணிவு' வில்லன் ஜான் கொக்கேன்

சினிமாவில் நடிகராக இருந்து கொண்டு இன்னொரு ஹீரோவின் ரசிகர் என யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒரு சிலர் நான் இந்த ஹீரோவின் ரசிகன் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களில் 'நான் அஜித்தின் ரசிகன்' என வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் 'துணிவு' பட வில்லன் ஜான் கொக்கேன். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். ஆனால், அவர் இதற்கு முன்பே … Read more

”எங்களையே ஓவர்டேக் பண்றிங்களேப்பா”.. வாரிசை தாறுமாறாக கொண்டாடும் தெலுங்கு ஆடியன்ஸ்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியானது. படத்தில் விஜய்யை தவிர வேறு எந்த ப்ளஸும் இல்லை என விஜய் ரசிகர்களே விரக்தியில் பேசியிருந்த பல வீடியோக்கள் கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களில் கொடிகட்டி பறந்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு படம் போலவே வாரிசு இருப்பதாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். வழக்கமாக கலவையான விமர்சனங்களை பெறும் படங்களுக்கு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என சிலாகிப்பதுண்டு. ஆனால் விஜய்யின் … Read more

வாரிசு படத்துடன் விஜய் 67 அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர்

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் விஜய் ரசிகர்களை கவரும் விதமாக புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர் தியேட்டர் நிர்வாகத்தினர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள ஒரு திரையரங்கம் ஒரு புதிய யுக்தியை கையாண்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் விஜய் தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது. விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள அவரது 67வது படம் தற்போது படப்பிடிப்புடன் துவங்கியுள்ளது. கவுதம் மேனன், மன்சூர் … Read more

அஜித் செய்த சம்பவங்கள்… பின்னுக்கு போன முன்னணி நடிகர்கள் – முழு பின்னணி

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படம் ஒரே சமயத்தில் திரையரங்கில் இறங்குவது என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. 1950க்கு முன்பிருந்து தற்போது வரை இரு துருவ நட்சத்திரங்களின் படம் களமிறங்கி, ரசிகர்களுக்கு விருந்தாக அமைவது நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி சமயங்களில் தான் இதுபோன்ற இரு படங்கள் இறங்கி திரையரங்கை கல்லா கட்டா செய்யும். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்ற வழியில் விஜய் – அஜித் படங்களும் நெடுங்காலமாக போட்டியிட்டு தமிழ் … Read more

ஸ்பீல்பெர்க் – ராஜமவுலி சந்திப்பு

ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 'ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க், ஈ.டி, இண்டியானா ஜோன்ஸ், ஜுராசிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், த லாஸ்ட் வேர்ல்டு – ஜுராசிக் பார்க்' என பல சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் வசம் வைத்துள்ளார். அவரை தெலுங்கு திரைப்பட இயக்குனரான ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். அது பற்றிய புகைப்படங்களை 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். … Read more

கர்நாடகாவில் தெலுங்குப் படங்களை மிஞ்சும் 'துணிவு, வாரிசு'

2023 பொங்கலுக்கு தமிழில் இரண்டு படங்கள், தெலுங்கில் மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. தமிழில் விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்களும், தெலுங்கில், பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி', சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா', சந்தோஷ் சோபன், பிரியா பவானி சங்கர் நடித்த 'கல்யாணம் கமனீயம்' ஆகிய படங்களும் வெளியாகி உள்ளன. இந்தப் படங்கள் கர்நாடகாவிலும் பெரிய அளவில் வெளியிடப்பட்டுள்ளன. கர்நாடகத் தலைநகரான பெங்களூருவைப் பொறுத்தவரையில் நிறைய தமிழர்கள், தெலுங்கர்கள் உள்ளனர். அங்கு … Read more