பத்து வருடம் கழித்து மீண்டும் வெங்கட்பிரபு படத்தில் ராம்கி

எண்பதுகளின் மத்தியில் சாக்லேட் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடித்தவர், தொண்ணூறுகளின் இறுதியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களில் நடித்தார். 2003க்கு பிறகு பெரிய அளவில் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிய ராம்கியை கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு தான் இயக்கிய பிரியாணி படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைத்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அந்த படம் ராம்கிக்கு ஒரு புது இன்னிங்ஸ் துவக்கமாக அமைந்து, அதன்பிறகு வருடத்திற்கு இரண்டு … Read more

”எங்களுக்கு சோறுபோடுங்க; தலையில் தூக்கிவச்சு கொண்டாடாதீங்க”-கண்டிப்பார்களா நட்சத்திரங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’  படம் வெளியானது. இதேபோல், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் எல்லாம் முன்னணி நடிகர்கள் என்பதால், இவர்களது ரசிகர்களின் அலப்பறைகளுக்கும் சிறிதும் பஞ்சமில்லை. அப்படி ஒரு கொண்டாட்டத்தின்போதுதான், அஜித் ரசிகரான 19 வயது இளைஞர் ஒருவர் சென்னையில் தனது உயிரை விட்டார். விஜய்யின் போஸ்டரை அஜித் ரசிகர்களும், … Read more

விஜய்சேதுபதிக்கு முக்கியத்துவம் : பாலிவுட் நடிகர் கோபமா…?

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படங்களை விட மற்ற ஹீரோக்களுடன் இணைந்து வில்லனாகவோ அல்லது இன்னொரு ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கே ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டில் இருந்தும் அவரை தேடி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே இந்தியில் மூன்று படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி பிரபல இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்சி என்கிற வெப்சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் … Read more

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு உதவிய நடிகர் விஜய்!!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண்னுக்கு நடிகர் விஜய் சார்பில் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி 16 வயது மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அந்த மாணவியை நான்கு பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி தனது உடலுக்கு தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தார் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்டு சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான மாணவியின் வாக்குமூலத்தின் பேரின் 4 பேரை … Read more

தனுஷ் இயக்கும் புதிய படத்தின் பெயர் ராயன்

ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி என்ற படத்தை இயக்கிய தனுஷ் தற்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அந்த படத்தை சென்னையில் உள்ள ராயபுரத்தை மையமாகக் கொண்ட கதை களத்தில் இயக்குகிறார். மேலும், ராயன் என்ற பெயரில் உருவாகும் இப்படம் மூன்று அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை, பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட குடும்ப செண்டிமெண்ட் கதையில் உருவாகிறது. எஸ். ஜே. சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், … Read more

"கீரவாணியை முதன்முதலில் இப்படித்தான் பார்த்தேன்…" – மலையாள நடிகர் வினித் சீனிவாசன் நெகிழ்ச்சி

ராஜமெளலியின் `ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்றது. ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் எனப் பலரும் படக்குழுவினருக்கும், இப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மரகதமணிக்கும் (கீரவாணி) தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குநரான வினித் சீனிவாசன், இசையமைப்பாளர் மரகதமணியை முதன்முதலில் சந்தித்த தருணம் பற்றி நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். வினித் சீனிவாசனின் பதிவு இது … Read more

புலியின் வாலை பிடித்து கேபி சேட்டை!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்த கேப்ரில்லா தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் புகழ் பெற்ற கேபி சினிமாவில் ஹீரோயினாக கமிட்டாவார் என்றே அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்பு தான். தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' தொடரில் நடித்து வரும் கேபி தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கலக்கி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாவிலும் போட்டோஷூட், ரீல்ஸ் என … Read more

மனநலம் குறித்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

கடந்த ஆண்டு நடிகை ஸ்ருதி ஹாசன், மனநலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவது மற்றும் அவற்றை சரி செய்வது எளிதான விவகாரம் அல்ல என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அண்மையில், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘வால்டர் வீரய்யா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஸ்ருதி ஹாசன் கலந்துக் கொள்ளவில்லை. அது அவரது மனநல பிரச்னைகள் குறித்த பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. தனது மனநலம் குறித்த செய்திகளை கடுமையாக சாடிய அவர், தாம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுதான் … Read more

”இப்படி ஆகும்னு நினைக்கல”.. அர்ஜூன் தாஸ் உடனான போட்டோ குறித்து ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கம்!

நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்ததால் எழுந்த கருத்துக்களுக்கு, நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக பதிலளித்துள்ளார். மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. தமிழில் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்திலும், … Read more