ரஜினியின் 169வது படத்தின் இயக்குனர் மாறுகிறாரா?

ரஜினியின் தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் அடிக்கவில்லை. அதன் காரணமாக தனது 169வது படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார் ரஜினி. அதன் காரணமாகவே கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வந்த நெல்சன் இயக்கத்தில் அடுத்து கமிட்டானார் ரஜினி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் ரஜினி குழப்பத்தில் இருப்பதாக … Read more

தெலுங்கில் பின்னடைவை சந்திக்கும் 'பீஸ்ட்'

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரது நடிப்பில் உருவான 'பீஸ்ட்' படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஆனால் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் இப்படம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதற்குக் காரணம் பிரம்மாண்டமான 'கேஜிஎப் 2' படம். 'பீஸ்ட்' படத்தை பல மடங்கு பிரம்மாண்டமாக இருந்ததால் 'கேஜிஎப் 2' படம் பற்றித்தான் ரசிகர்கள் அதிகமாகப் பேசுகின்றனர். அது … Read more

ஸ்பைடர் மேன் படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்த ஃபுளோரிடாவாசி!

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” திரைப்படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராமிரோ அலனிஸ் என்ற இளைஞர், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை 292 முறை “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” படத்தைப் பார்த்துள்ளார். பிரபலமான மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ஸ்பைடர் மேனை அடிப்படையாகக் கொண்ட … Read more

நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து அஜித்தின் 61ஆவது படத்தையும் தயாரித்து வரும் போனிகபூர், உதயநிதி நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி படத்தையும் தயாரித்து வருகிறார். ஹிந்தியில் வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீ-மேக் இது. கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது மே 20ஆம் தேதி உலகமெங்கிலும் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகும் என்று போனிகபூர் … Read more

ரஜினிகாந்த் சாதனையை முறியடிக்கப் போகும் யஷ்

தென்னிந்தியத் திரையுலகத்தில் பல வசூல் சாதனைகளை எப்போதோ படைத்தவர் தமிழ் நடிகரான ரஜினிகாந்த். அவரது பல படங்கள் தெலுங்கு, ஹிந்தியில் டப்பிங் ஆகி குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளன. இதுவரையில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படங்களில் தமிழ்ப் படங்கள்தான் அதிக வசூலைப் பெற்றுள்ளன. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த '2.0, ரோபோ' ஆகிய படங்கள்தான் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. அதற்கடுத்த இடங்களில் “ஐ, கபாலி, காஞ்சனா 3, சிவாஜி, முனி 3, பிச்சைக்காரன், லிங்கா, 24, ஏழாம் அறிவு, … Read more

ஆச்சார்யாவுக்காக சிரஞ்சீவியும் ராம்சரணும் ஆடும் நாட்டுக்கூத்து

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டால சிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரணும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளார்.. இந்தப்படத்தில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் மட்டுமே சுமார் 25 நிமிடங்கள் வரை இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் பாடல் காட்சி ஒன்றும் படத்தில் இடம் பெறுகிறது. … Read more

பிரபல இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்..! உலகத்தரத்தில் உருவாகும் திரைப்படம்..!

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை துவங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது அவரின் அடுத்த படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ETAKI ENTERTAINMENT தயாரிப்பு நிறுவனம் சார்பில் சித்தார்த் மற்றும் S .U அருண் குமார் இணையும் படத்தைப்பற்றிய அறிவிப்பு இன்று சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிவுள்ளது. விஜய் … Read more

சிங் இன் த ரெயின் – வடிவேலு, பிரபுதேவா சந்திப்பு

தமிழ்த் திரையுலகத்தில் சில நகைச்சுவைக் காட்சிகளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. அப்படி ஒரு நகைச்சுவைக் காட்சி பிரபுதேவா, வடிவேலு நடித்த 'மனதைத் திருடி விட்டாய்' படத்தில் உள்ளது. அந்தப் படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் ஆகியோர் கூட்டணி காமெடியில் ஒரு கலக்கு கலக்கியது. படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் அப்போதெல்லாம் சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும். இப்போது கூட அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. … Read more

ஹிந்தியில் 250 கோடி வசூல் கடந்த 'ஆர்ஆர்ஆர்'

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கில் தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. முதல் நாள் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 500 கோடி அதன் பிறகு 1000 கோடி வசூல் என தொடர் சாதனை படைத்தது. மற்றொரு சாதனையாக ஹிந்தியில் தற்போது 250 கோடி வசூலை இந்தப் … Read more

கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்

தற்போது தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படம் 2019 தெலுங்கில் வெளியான ஏஜன்ட் சாய் சீனிவச ஆத்ரெயஎன்ற படத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் சந்தானத்துடன் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் உள்பட பலர் நடிக்க மனோஜ் பீதா என்பவர் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் … Read more