அசோக் செல்வன் நடிப்பில் உருவான புதிய படத்தின் அப்டேட் வெளியிடு…!

‘ நித்தம் ஒரு வானம் ‘ படத்தின் படப்பிடிப்பு ம் முழுவதுமா நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அசோக் செல்வன் நல்ல கதைக்களம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் கடைசியாக நடித்த மன்மதலீலை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது அசோக் செல்வன் கார்த்திக் என்பவர் இயக்கத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில்நடித்து வந்தார். பயில்வான் ரங்கநாதன் கேட்ட வில்லங்கமான கேள்வி: அஜித்தின் தரமான பதிலடி..! இந்தப் படத்தில் … Read more

‘நான் காமராஜர் மாதிரி கைசுத்தம் உள்ளவன்டா‘- விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்‘ ட்ரெய்லர் வெளியீடு

இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகியப் படங்களுக்கு பிறகு, சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் … Read more

அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்' படப்பிடிப்பு நிறைவு

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மன்மதலீலை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து கார்த்திக் என்பவரது இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' என்ற படத்தில் நடித்து வந்தார். நாயகிகளாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஷிவதா என நான்கு நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படம் … Read more

'பீஸ்ட்' பட சர்ச்சை.. விஜய் பண்ண தப்பு என்ன.?: கொந்தளிக்கும் மக்கள்..!

நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் … Read more

கதையை நம்புங்கள், ஹீரோக்களை நம்பாதீர்கள் – ராம்கோபால் வர்மா காட்டம்

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அங்கு வெற்றிக்கொடி நாட்டி பலருக்கும் வழி காட்டியவர். அவரது வழியில்தான் இன்று ராஜமௌலி உள்ளிட்டவர்களும் ஹிந்தியில் சாதித்து வருகிறார்கள். அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிடும் வர்மா, 'கேஜிஎப் 2' படம் பார்த்துவிட்டு மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை, ஆனால், உண்மையான கருத்தைப் பதிவிட்டுள்ளார். “கேஜிஎப் 2' படத்தின் அசுரத்தனமான வெற்றி தெளிவான ஒரு ஆதாரமாக அமைந்துவிட்டது. ஒரு படத்தின் ஹீரோவுக்கு அதிக சம்பளம் … Read more

தீயாய் வெளியான உதயநிதி படத்தின் மாஸ் அறிவிப்பு: என்ன செய்ய காத்திருக்காங்களோ.!

அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது. வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற இந்தப்படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த ‘ … Read more

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிக்கள் 15’. இந்தியில் வெளியான இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, ‘ஆர்டிக்கள் 15’ படம், ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா … Read more

வெற்றிமாறன் திரை ஆய்வகத்திற்கு தாணு ஒரு கோடி நிதி உதவி

இயக்குனர் வெற்றிமாறன் தனது நாம் அறக்கட்டளையின் சார்பில் திரை பண்பாட்டு மையம் என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார். திரைத்துறையில் ஆர்வம் உள்ள ஏழைகளுக்கு உணவு, தங்குமிட வசதியோடு இலவச திரை பண்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக இந்த அமைப்பை தொடங்கி உள்ளார். இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை … Read more

கருணாஸ் நடிப்பில் உருவான ஆதார் படத்தின் டிரெய்லர் வெளியிடு…! கொண்டாடும் ரசிகர்கள்…!

கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ ஆதார் ’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் கலக்க வந்திருக்கிறார் கருணாஸ். அவர் முதன்மை கதாபாத்திரத்துள்ள திரைப்படம் ‘ஆதார்’. இந்த படத்தை அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரித்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அருண்பாண்டியன், ஆனந்தபாபு, திலீப், ‘பாகுபலி’ நடிகர் பிரபாகர், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் … Read more

பூர்வீக கிராமத்தில் வீடு கட்டிய சிவகார்த்திகேயன்

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் சிவகார்த்திகேயன். இப்போது தமிழில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவீழிமழலை ஆகும். பூர்வீக இசை குடும்பம் அவருடையது. சிவகார்த்திகேயன் தாத்தாக்களான கோவிந்தராஜா பிள்ளை, தட்சினாமூர்த்தி பிள்ளை இருவரும் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாதஸ்வராக கலைஞராக விளங்கியவர்கள். சிவகார்த்தியேனின் தந்தை போலீஸ் அதிகாரியாக திருச்சியில் பணியாற்றியதால் நீண்ட காலம் சிவகார்த்திகேயன் திருச்சியில் வளர்ந்தார். இந்த நிலையில் தாத்தாக்கள் வாழ்ந்த … Read more