அற்புதமான தந்தை ஆக போகிறீர்கள் : கணவர் குறித்து காஜல் நெகிழ்ச்சி

காதலர் கவுதம் கிச்சுலு என்பவரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இதையடுத்து தனது கர்ப்ப கால அனுபவங்களை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வரும் காஜல் அகர்வால், தற்போது தனது கணவருக்கு ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பெண் விரும்பக்கூடிய சிறந்த கணவர் மற்றும் சிறந்த அப்பாவாக நீங்கள் இருப்பதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் காலை முதல் … Read more

ரன்பிர் – அலியா பட் திருமணம்..கலந்துகொண்ட பிரபலங்கள்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான ராபின் கபூர் மற்றும் அலியா பட் இன்று திருமணம் செய்துகொண்டார்கள். இருவரும் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்தபோது ஈருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. முதலில் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் தங்கள் காதலை முதலில் வெளிகாட்டிக்கொள்ளவில்லை. அதன் பின் இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர். எனவே இவர்களது திருமணம் கடந்த 2020 ஆம் ஆண்டே நடைபெறவிருந்தது. பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற இந்தி வசனம்…அண்ணாமலை கருத்து.! ஆனால் கொரோனா சூழல் காரணமாக ரன்பிர் … Read more

ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் இனிதே நிறைவேறியது – வைரலாகும் புகைப்படங்கள்

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஆலியா பட் – ரன்பீர் கபூர்  திருமணம் மும்பையில் உள்ள வாஸ்து இல்லத்தில் இன்று மாலை இனிதே நடந்தேறியது. திரையுலகில் கால் பதிக்கும் நட்சத்திரங்கள் பின்னாளில், தங்களது சக நடிகர் அல்லது நடிகையை திருமணம் செய்துகொள்வர். அந்தவகையில், பாலிவுட்டின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான ‘பிரம்மாஸ்திரா‘ படப்பிடிப்பின் போது பழகத் தொடங்கினர். இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் … Read more

கனவில் கூட நினைக்காத சாதனை : ரஜினி பாராட்டு பற்றி விக்ரம் பிரபு நெகிழ்ச்சி

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனரான தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'டாணாக்காரன்'. காவலர் பயிற்சி பள்ளியைக் மையமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதன ராவ், அஞ்சலி நாயர், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இது குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் அழைத்து டாணாக்காரன் படத்தில் … Read more

தனுஷின் உருக்கமான பதிவு..வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் என்னதான் தற்போது தோல்வி முகத்தில் இருந்தாலும் இந்திய சினிமாவில் ஒப்பற்ற நடிகராகவே திகழ்ந்து வருகின்றார். எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி அக்கதாபாத்திரமாகவே வாழும் தன்மை கொண்டவர் தனுஷ். பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த தனுஷ் தற்போது சற்று தடுமாறி வருகின்றார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது நடிப்பில் வெளியான கடைசி திரைப்படங்களாக ஜகவே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற இந்தி வசனம்…அண்ணாமலை கருத்து.! மிகுந்த எதிர்பார்ப்பில் … Read more

விஜய்யின் 'பீஸ்ட்' முதல் நாள் வசூல் எவ்வளவு? முந்தைய சாதனைகளை முறியடித்ததா?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் 36 கோடியே 88 லட்சம் வசூல் செய்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் 13ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. அதிலும் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை அடுத்தடுத்த காட்சிகள் திரையிடப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தில் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். அதில் செங்கல்பட்டு விநியோகஸ்த பகுதியில் … Read more

பைரசி தளங்களில் வெளியான பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் மற்றொருபுறம் படத்திற்கு அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துள்ளன. இந்நிலையில் சினிமா படங்களை பதிவிறக்கம் செய்ய சில பைரசி இணையதளங்கள் உள்ளன. படம் ரிலீசாகி ஒருநாள் முடிவதற்குள் பீஸ்ட் முழு படமும் இணையத்தில் வெளியாகி விட்டது. படம் ஆன் லைனில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ள அதேசமயம் விஜய்யின் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். படத்தை ஆன்லைனில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்குமாறு … Read more

தனுஷை விடாமல் துரத்தும் ஐஸ்வர்யா: இதுக்கு ஒரு எண்டே கிடையாதா..?

சமீப காலத்தில் கோலிவுட் வட்டாரத்திலே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது தனுஷ் , ஐஸ்வர்யா பிரிவு தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரஸ்பரம் பிரியவுள்ளதாக இருவரும் அறிவித்தனர். பிரிவிற்கு பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று … Read more

'பீஸ்ட்' டிக்கெட்டை பிளாக்கில் விற்ற நபருக்கு ஜாமீன்

பீஸ்ட் பட டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போலீசார் கைதுசெய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுமார் 800 திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி டாக்கீஸ் திரையரங்கில் பீஸ்ட் பட டிக்கெட்டுகள் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் தியேட்டர் வாசலில் பீஸ்ட் பட டிக்கெட்டை … Read more

படப்பிடிப்பு வீடுகளை மீனவ குடும்பங்களுக்கு தரும் சூர்யா

சூர்யாவின் திரையுலக வாழக்கையில் நந்தா மற்றும் பிதமாகன் படம் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சூர்யாவின் 41வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மீனவராக சூர்யா நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்காக கடற்கரை பகுதியில் மீனவர்கள் வசிக்கும் குடிசைகள் போல பல குடிசை வீடுகளை நிஜமாகவே உருவாக்கி பட்டப்படிப்பை நடத்தி வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு … Read more