விஜய், அஜித்திற்கு எதற்கு பான் – இந்தியா படங்கள் ? மற்ற மொழி ஊடகத்தினர் கேள்வி

பான்-இந்தியா படங்கள் என்ற மிகப் பெரிய வட்டத்திற்குள் தெலுங்கு ஹீரோக்கள் சிலரும், கன்னடத்திலிருந்து ஒருவரும் சென்று விட்டார்கள். தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், கன்னடத்திலிருந்து யஷ் ஆகியோர் இந்திய அளவில் பிரபலமாகியுள்ள தென்னிந்திய ஹீரோக்களாக முன்னிலை வகிக்கிறார்கள். ஆனால், தமிழில் தங்களது படங்களை பான்-இந்தியா படங்களாக வெளியிட ஆசைப்படும் ஹீரோக்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள். அஜித் அவர் நடிக்கும் தமிழ்ப் படங்களின் பிரமோஷன்களுக்கே வர மாட்டார். அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். விஜய் … Read more

தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா மேனன்

'தமிழ் படம் 2 மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அடுத்து 'நான் சிரித்தால்' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார். பல படங்களில் ஹீரோயினாகவும், சிறு சிறு கேரக்டர்களிலும் நடித்துள்ளார். தேசவாலே, நமோ புரோத்தமா கன்னட படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கில் கால்பதித்துள்ளார். யுவி கிரியேஷன் தயாரிப்பில், தமிழில் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து நிகில் நடிக்க, இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் … Read more

பீஸ்ட், கேஜிஎப் 2வுடன் மோதவில்லை: ஷாகித் கபூர்

விஜய் நடித்த பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி வெளியாகிறது. 14ம் தேதி யஷ் நடித்த கேஜிஎப் 2 வெளியாகிறது. ஒரே நேரத்தில் இரு பெரிய படங்கள் மோத வேண்டாம் என்று பலரும் கருத்து சொன்ன நிலையில் இரு படத்தின் தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவில் இருந்து பின் வாங்க விரும்பாததால் இரு படங்களும் வெளிவருவது உறுதியாகி இருக்கிறது. இரு படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் நிலையில் அதே தேதியில் ஷாகித் கபூர், மிர்னால் தாகூர் நடித்த 'ஜெர்ஸி' படமும் … Read more

ஏஆர்.ரகுமானோடு தொடங்கி இளையராஜா இசையுடன் ஒலிம்பியாட் போட்டி நிறைவு பெறும்: அமைச்சர் தகவல்

”ஏஆர்.ரகுமானின் இசையோடு ஒலிம்பியாட் போட்டி தொடங்கி இளையராஜா இசையுடன் நிறைவடைய உள்ளது” என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். ”தமிழகத்தில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏஆர்.ரகுமானின் இசை நிகழ்வோடு தொடங்கி, நிறைவு விழா இளையராஜாவின் இன்னிசையுடன் உலகமே வியக்கும் வகையில் நிறைவு பெற இருக்கிறது” என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

தங்க இதயம் கொண்ட சிங்கம் மனிதன் – தம்பியை புகழ்ந்த அண்ணன்

நீண்ட இடைவெளிக்கு பின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ‛நானே வருவேன்'. இந்துஜா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட தனுஷ் போட்டோவை பகிர்ந்து, ‛‛நீண்ட காலமாக எங்களின் படங்களில் நாங்கள் பிஸியாக இருந்ததால் ஒருவரோடு ஒருவர் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நானே வருவேனில் இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்த மனிதன் தங்க இதயம் … Read more

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியுடன் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள பிக்பாஸ் பிரபலம்!

தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் நடிக்கும் படம் லெஜன்ட். இந்தப் படத்தை அவரது நிறுவன விளம்பர படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர்கள் எஸ்எஸ்ராஜமவுலி, மணிரத்னம் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். இதனிடையே சரவணன் … Read more

தவிர்க்க முடியாப் புதிய தடம் பதித்திருக்கும் ’டாணாக்காரன்’ : புகழ்ந்து தள்ளிய சீமான்!

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ படத்தினை பார்த்துவிட்டுப் பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும் காவல்துறையில், புரையோடிப் போயிருக்கும் ஆதிக்கப் படிநிலைகளை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுகிறது, தம்பி தமிழ் இயக்கி நேற்று வெளிவந்திருக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படம். 1982ம் ஆண்டில் காவல் பணிக்குத் தேர்வானவர்கள், பின்பு தமிழ்நாட்டில் … Read more

தயாரிப்பாளர், இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய 'கலைஞரின் கண்ணம்மா' என்ற படத்தை இயக்கி, தயாரித்தவர் பாபா விக்ரம். இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இதுதவிர என் இதய ராணி, பொம்மை நாய்கள் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து, இயக்கி உள்ளார். கடைசியாக இமான் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் என்ற படத்தை இயக்கி வந்தார். 83 வயதான பாபா விக்ரம், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது … Read more

இசை மழையில் நனைய தயாரா…! தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையில் பாடும் சிம்பு…!

இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டிகதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை நதியா அப்படத்தில் ராமின் அம்மாவாக நடிக்கிறார். நடிகர் ஆதியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.தற்போது இந்தப் படத்தில் நடிகர் சிம்பு பாடகராக இணைந்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு … Read more

மிரட்டலான கெட்டப்பில் சதீஷ் : ’சட்டம் என் கையில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிம்பு

நடிகர் சதீஷின் ‘சட்டம் என் கையில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சதீஷின் அடுத்தப்பட அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியிருக்கிறது. ’சட்டம் என் கையில்’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தினை ‘சிக்சர்’ பட இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். கோகுலகிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்யநாராயணன், பரத்வாஜ் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் தயாரிக்கிறார்கள். பி.ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் … Read more