கே.ஜி.எஃப். முதல் பாகம் – இன்று முதல் திரையரங்குகளில் மறுவெளியீடு

கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்தத்திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் இன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கே.ஜி.எஃப். கன்னட திரைப்படம் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கோலார் தங்க வயலை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட புனைவுக்கதை, அனைத்து மொழி ரசிகர்களையும் வியக்க வைத்தது. இதன் இரண்டாம் பாகம் தமிழ்ப்புத்தாண்டு அன்று ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், ரசிகர்கள் … Read more

சிம்புவிற்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது ?வருத்தத்தில் ரசிகர்கள்..!

சர்ச்சைகள் மற்றும் சிக்கல்கள் என தவித்துக்கொண்டிருந்த சிம்பு தற்போதுதான் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். அறிவித்த படங்கள் கைவிடப்படுவதும், நடித்த படங்கள் வெளிவராமல், அப்படியே வெளிவந்தாலும் வெற்றியடையாமலும் தவித்து கொண்டிருந்தார் சிம்பு. இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று கருதிய சிம்பு அதிரடியாக தன் உடல் எடையை குறைத்தார். தன்னை விமர்சித்தவர்களுக்கு தனது தரமான செய்கையின் மூலம் பதிலளிக்க தயாரானார் சிம்பு. அதன் படி அதிரடியாக அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது அனைவரையும் … Read more

என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்: அதிரடி காட்டும் ஐஸ்வர்யா..!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார். இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. … Read more

ரூ.1000 கோடி கிளப்பில் 'ஆர்ஆர்ஆர்' – 2வது முறையாக ராஜமவுலி செய்த சாதனை

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் மார்ச் 25ல் திரைக்கு வந்த படம் ‛ஆர்ஆர்ஆர்'. உலகம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்தது. மூன்றே நாட்களில் 500 கோடி வசூலை உலக அளவில் கடந்து சாதனை படைத்தது. இப்போது அடுத்த சாதனையாக ரூ.1000 கோடி வசூலை எட்டி உள்ளது. இதை படக்குழுவினர் மும்பையில் விழா எடுத்து கொண்டாடி உள்ளனர். இதில் ராஜமவுலி, … Read more

“ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு

விஜய் ஆண்டனி நடிப்பில் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அவற்றில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‛‛ரத்தம்'' படமும் ஒன்று. மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, ஓஏகே சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கண்ணன் இசையமைக்கிறார். முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் “ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு முழுமையாக … Read more

ஓடிடியில் வெளியாகும் ராதிகா ஆப்தே படம்

தமிழில் கபாலி, சித்திரம் பேசுதடி- 2 படங்களில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது புஷ்கர் காயத்ரி ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் விக்ரம் வேதா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் விக்ராந்த் மாஸே என்ற பாரன்சிக், சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் புரியா இயக்கியுள்ள இப்படத்தில் பிராச்சி தேசாய், … Read more

காதலருக்கு செல்லப்பெயர் வைத்த ஸ்ருதிஹாசன்

தெலுங்கில் பிரபாசுடன் சலார், பாலகிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். மேலும் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், அவருடன் தான் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ, போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது காதலருக்கு வைரம் என்று செல்லப்பெயர் வைத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், வைரத்துடன் காதலரை ஒப்பிட்டு ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.

‛வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' – ‛மாநாடு' பட டயலாக் படமாகிறது

சிம்பு நடித்த ‛மாநாடு' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும் ‛வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பிட்டு' என்ற வசனம் பிரபலம். இதை வைத்து நிறைய மீம்ஸ்கள் வந்தன. இப்போது இதில் வரும் செத்தான் என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டு ‛வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' என்ற பெயரில் ராம் பாலா ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படமும் இவரின் முந்தைய படங்களான தில்லுக்கு துட்டு 1,2, இடியட் பட பாணியில் காமெடி கலந்த திரில்லர் கதையில் உருவாகிறது. இதில் … Read more

தென்னிந்திய சினிமாவை தவறாக பேசவில்லை ; ராஷி கண்ணா விளக்கம்

அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது இந்தியில் ருத்ரா என்கிற படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகைப் பற்றி விமர்சித்து பேசியதாக ஒரு தகவல் கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. குறிப்பாக … Read more

ராம்பாலாவின் இயக்கத்தில் உருவாகும் அடுத்தப் படம் …! இவர்தா ஹீரோவாமே….!

‘ இடியட் ’ இயக்குனர் ராம்பாலாவின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் ‘லொள்ளு சபா‘ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ராம்பாலா , புதிய காமெடி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கி சந்தானம் நடிப்பில் வெளியான ‘ தில்லுக்கு துட்டு ’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.சமீபத்தில் மிர்ச்சி சிவாவை வைத்து அவர் ‘இடியட்’ படத்தை இயக்கினார். … Read more