கூடிய விரைவில் இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி. அவர் இயக்கும் திரைப்படத்திற்கு `சரஸ்வதி’ எனப் பெயரிட்டிருக்கிறார். இயக்குவதோடு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, நவீன் சந்திரா ஆகியோரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். வரலட்சுமி தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து வரலட்சுமியே தயாரிக்கவும் இருக்கிறார். தற்போது இத்திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் வரலட்சுமி பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “பாலா சார், நீண்ட … Read more