`பாட்ஷா பார்த்துட்டு ரஜினி போலவே ஆட்டோ ஓட்டினேன்!' – டூப் ஆர்டிஸ்ட் ரஜினி சோமுவின் கதை! |Human Story

“வணக்கம் பிரதர். எப்படி இருக்கீங்க” என வாஞ்சையோடு வரவேற்றுப் பேசத் தொடங்கினார் ரஜினி சோமு. திண்டுக்கல்லைச் சேர்ந்த டூப் கலைஞரான சோமு பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் போல் வேடமிட்டு மேடைகளில் நடித்து வருகிறார். ரஜினி வேடத்தில் உலகையே சுற்றி வந்துள்ள இவர், ரஜினிகாந்தின் டூப் ஆர்டிஸ்ட்களில் கவனிக்கத்தக்கவர். தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கவனம் பெற்று வருகிறார். Rajini Somu Story உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் நம்மைக் கண்டதும் … Read more

“சில நடிகர்கள் முகமூடி அணிந்து நல்ல பேரு வாங்குறாங்க; கடந்த 5 வருஷத்துல..'' – மாளவிகா மோகனன்

‘Pattam Pole’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாத்துறையில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார். மாளவிகா மோகனன் இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியைச் சரியான … Read more

சூர்யாவின் ரெட்ரோ ப்ரீ புக்கிங்.. பொழியும் வசூல் மழை.. எவ்வளவு தெரியுமா?

Retro Pre Booking Collections: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ப்ரீ புக்கிங் இல் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்.. வைரலாகும் வீடியோ

Sudha Kongara About Actress Samantha: சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சமந்தாவைப் பற்றி இயக்குநர் சுதா கொங்கரா மேடையில் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

Sumo Review: இது சீரியஸ் படமா, ஸ்பூஃப் படமா? ஜப்பான் வீரரும் சோதிக்கும் காமெடி கலவரமும்!

சென்னை கோவளத்தில் உணவகம் நடத்தும் ஜாக் (விடிவி கணேஷ்), செக்போஸ்டில் போலீஸ்காரரிடம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் சிக்கிக் கொள்கிறார். அவரது காரில் ஒரு பெட்டி இருக்கிறது. அதைத் திறக்க அனுமதிக்காத அவர், அந்தப் பெட்டியின் பின்னணிக் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அதில், அவரது உணவகத்தில் பணிபுரியும் சிவா, சர்ஃபிங் செய்யச் சென்ற ஒரு நாளில், கடலில் அடித்து வரப்பட்ட யோஷினோரி தாஷிரோவை காப்பாற்றிய கதை அடங்கியிருக்கிறது. யோஷினோரியை இவர்கள் எப்படிப் பராமரித்தார்கள், உயிர் பிழைத்த … Read more

Retro நாயகிகள் 01 : வான்டடாக பஸ்ஸை தவற விட்ட சிறுமி, பின்னாளில்… `அழகிய தமிழ் மகள்’ மஞ்சுளா

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. முதல் நாயகி, போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் ஆன ஒரு நடிகை. நடிகை மஞ்சுளா இல்லைன்னா சினிமாவுல நடிக்கப்போறியா?’‘ஸ்கூலுக்கு சரியா வர்றியா அந்த சிறுமிக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அவங்க பார்த்த ஒரு … Read more

ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும்: இயக்குநர் கே.பாக்யராஜ்

“குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு என்பது வேறு” ; நிழற்குடை விழாவில் இயக்குநர் பேரரசு நெத்தியடி பேச்சு 

Nizhal Kudai: “என் வாழ்க்கையில் அக்கா மாதிரி நபரைப் பார்த்ததே இல்லை..'' – தேவயானி குறித்து நகுல்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், வடிவுக்கரசி, நீலிமா ஆகியோர் நடித்திருக்கின்றனர். வரும் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. நிழற்குடை படக்குழு இந்த நிகழ்வில் தேவயானியின் தம்பியும், நடிகருமான … Read more

'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' – ரஜினி பற்றி சீமான் பேசியது என்ன?

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா ஆகியோர் நடித்திருக்கின்றனர். நிழற்குடை படக்குழு வரும் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின்  இசைவெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் … Read more

Gangers: "ஒரே சிரிப்பு சரவெடி; வடிவேல் சாரின் மேஜிக்…" – கேங்கர்ஸ் படக்குழுவைப் பாராட்டிய சிம்பு

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் ‘கேங்கர்ஸ்’. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். தவிர மைம் கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.  இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 24) திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இந்நிலையில் படத்தைப் பார்த்த சிம்பு படக்குழுவைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். கேங்கர்ஸ் அவர் வெளியிட்டிருந்த … Read more