Vijay: த.வெ.க தலைவர் விஜய் மதுரையில் ரோட் ஷோ | Photo Album

விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ Source link

பாகிஸ்தான் மீது இந்திய விவசாயிகள் சர்ஜிக்கல் தாக்குதல்… தக்காளி ஏற்றுமதியை நிறுத்தியதால் சட்னி இல்லாமல் ரத்த கொதிப்பு…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் விநியோகத்தைத் தடுப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் இரு … Read more

தாயில்லாத நேரத்தில் 15 வயது குழந்தையை நேர்ந்த கொடூரம் – புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் மகள், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருக்கிறார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறான் பூவரசன். அப்போது வீட்டிலிருந்த அவரின் மகள், அம்மா வெளியே சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட பூவரசன், அந்த சிறுமியை பாலியல் … Read more

1700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன : ED இயக்குநர்

அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும் நாட்டின் நீதி அமைப்பில் உள்ள சில உள்ளார்ந்த தாமதங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 1956 மே 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அமலாக்கத்துறை தனது 69 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் நவீன் இவ்வாறு பேசினார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் … Read more

"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" – புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்

ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ உதவிகளுக்காக இந்தியா வந்தவர்களும், திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்கு வந்தவர்களும் மத்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர். அதன்படி இந்தியாவுக்குத் திருமணம் செய்து கொண்டு வந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், புதுச்சேரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான் … Read more

வரும் 7 ஆம் தேதி சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை வரும் 7 ஆம் தேதி சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமலும், மக்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் … Read more

திருப்பூர்: தலை நசுக்கப்பட்டு இளம்பெண் படுகொலை; தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் தலை மற்றும் கைகளில் கற்களால் அடித்து நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெண்ணைக் கொலை செய்யப் பயன்படுத்திய கல் உள்ளிட்டவற்றில் பதிவான … Read more

இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் … Read more

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், ‘பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படுகிறதா?’ என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இப்போது திருச்சி மாவட்டத்தில் கிட்டதட்ட 104 டிகிரி வந்துவிட்டது. இப்போதைக்குப் பள்ளி திறப்பு ஜூன் 2-ம் தேதி என்று அறிவித்து உள்ளோம். கோடை வெயில் அந்த சமயத்தில் … Read more

பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2, 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அவற்றின் விலையை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயா்த்தப்பட்ட நிலையில் 2 மாதங்களில் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. தற்போது 195 … Read more