தலைப்பு செய்திகள்
TVK: தொண்டர் டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்; தவெக சுனில் ஆனந்த் பின்னணி என்ன?
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்காளர்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 பேர் வாக்களித்தனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 13 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அதற்கு அடுத்த சுற்றுகளில் த.வெ.க. சுனில் ஆனந்த் முன்னிலை பெற்றார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 75 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்ற சுனில் ஆனந்த் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். … Read more
கோவை: ’கோட்டையில் கோட்டை விட்ட அதிமுக’ – 30 ஆண்டுகளுக்குப் பிறகு படுதோல்வி; எத்தனை வென்றது TVK?
1974ம் ஆண்டு கோவை மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல் சட்டமன்ற உறுப்பினராக அரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் அ.தி.மு.க. பலம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக கோவை மாவட்டம் இருந்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைத் தவிர, மற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க-வை கோவை கைவிட்டதே இல்லை. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த போதும், கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி … Read more
நெல்லை: வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள்; ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்!| Photos
திருநெல்வேலி: சட்டமன்ற தேர்தல் முடிவுகள்! TVK உற்சாக வெற்றி கொண்டாட்டம்.! TVK: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய் – `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவ’னின் அரசியல் பயணம்! Source link
முருகன் சென்டிமென்ட் டு வன்னியர் வாக்குகள் – திருப்போரூரில் தவறிய பாமக கணக்கு… தோல்வியடைந்த பாலு!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தோல்வியை தழுவியுள்ளார் பாமக-வின் வழக்கறிஞர் பாலு. இந்தத் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விஜயராஜ். இந்தத் தொகுதியில் பாலுவிற்கு டஃப் போட்டியாக கருதப்பட்ட வி.சி.கவின் பன்னீர்தாஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். திருப்போரூர் முருகன் கோயிலுக்கும், அன்புமணிக்கும் தனி சென்டிமென்ட் உண்டு. அதையொட்டியே தனது வழக்கறிஞரை அந்தத் தொகுதியில் களமிறக்கினார் பாமக தலைவர் அன்புமணி. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உடன் கே.பாலு மயிலாப்பூரில் மலராத தாமரை – ‘மீண்டும் … Read more
32 திமுக அமைச்சர்களில் 15 பேர் அவுட்; சபாநாயகரும் தோல்வி! – Minister Candidates Result Details!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தற்போதுவரை தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதுவரை திமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தப் பட்டியலில், தற்போதுவரை தமிழ்நாட்டின் அமைச்சர்களில் யார் யார் வெற்றி, தோல்வி குறித்துப் பார்க்கலாம்… மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர் – கொளத்தூர் தொகுதி (தோல்வி) உதயநிதி ஸ்டாலின் – துணை முதலமைச்சர் – சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி (வெற்றி) துரைமுருகன் – நீர்வளத் துறை – காட்பாடி (தோல்வி) ஸ்டாலின் கே.என். நேரு … Read more
"ஊழலற்ற அரசியல் தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்"- விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து
234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தவெக விஜய் அன்பிற்குரிய திரு. விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தி, தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முன்மாதிரியான தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன். பிரிவினைகளை மறந்து, … Read more
`வியக்கத்தக்க வகையில் சிறப்பான பங்களிப்பு' – தவெக-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வாக்காளர்களுக்குத் தனது நன்றியையும், வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். தவெக விஜய் இந்தத் … Read more
'எதிர்க்கட்சியானாலும் ஜெயிப்பேன்.!' – சோக வரலாற்றை `போராடி' மாற்றிய கே.என்.நேரு
தமிழகத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அந்தவகையில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு, த.வெ.க வேட்பாளர் ராமமூர்த்தியிடம் ஆரம்பக்கட்ட சுற்றுகளில் பின்னிலை நிலையிலேயே இருந்தார். இதனால், கே.என்.நேரு தரப்பு அப்செட்டில் ஆழ்ந்தது. இந்நிலையில், 15 – வது சுற்றுக்கு பிறகு முன்னிலை பெற தொடங்கியதும், அவர் பெருமூச்சுவிட்டார். இறுதியில், அவர் வெற்றி பெற்றுள்ளார். trichy கடந்த தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் … Read more