தசரா திருவிழா: குலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம் – போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

உடன்குடி: புகழ்பெற்ற குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு தடை உள்பட பல பகுதிகளில்  போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. குலசேகரன்பட்டினம்  அருள்மிகு ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா  நாளை  (செப்டம்பர் 23ந்தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக  தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் … Read more

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த பிரிட்டன், ஆஸ்., கனடா- நெதன்யாகு எதிர்ப்பு; இந்தியா நிலைப்பாடு?|அலசல்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் கரம் தினம் தினம் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் போர் இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆனால், அது முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் இப்போது வரை இல்லை. வெறும் பேச்சு மட்டுமல்ல… இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சமீபத்தில், ‘பாலஸ்தீன் என்கிற ஒரு பகுதி இனி இருக்காது’ என்று பேசியிருக்கிறார். வெறும் பேச்சு மட்டுமல்ல… அவரது ஒவ்வொரு செய்கைகளும் அப்படி தான் … Read more

இந்தியாவில் பிறந்து வளர்ந்த போதும் ‘நாடற்றவர்’ என்று அறிவிக்கப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம்…

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பகிசன், 34 வயதான இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் இவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இவரை ‘நாடற்றவர்’ என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாவதும் தெரிவித்துள்ளது. பகிசனின் பெற்றோர் ரவீந்திரன் மற்றும் ஜெயா இலங்கையில் நடைபெற்ற இன மோதலை அடுத்து திரிகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு 1991ம் ஆண்டு அகதிகளாக வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் இவர்கள் … Read more

`பெரிய ஆள் ஒருத்தருடைய பினாமின்னு சொல்றாங்க' – இலங்கை மாணவர்களைப் படிக்க வைக்கும் பிளாக் பாண்டி

நான் அவங்க இல்லை! இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து நான்கு ஏழை மாணவர்களை கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் நடிகர் பிளாக் பாண்டி. சென்னையின் கல்லூரி ஒன்றில் அவர்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர இருக்கிறது பாண்டி நிறுவிய ‘உதவும் மனிதம்’ அறக்கட்டளை. இன்று அதிகாலை அந்த மாணவர்களுடன் சென்னை வந்திறங்கிய பாண்டியிடம் பேசினோம். ”பாண்டி இலங்கைத் தமிழர். அவருடைய சொந்தக்காரங்க அங்க இருக்காங்க. அதனால்தான் அடிக்கடி இலங்கை போயிட்டு வர்றார்னு சொல்றாங்க சிலர். … Read more

புதிதாக கட்டிய 9 மாதத்தில் அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்… வீடியோ

திருச்சி: திருச்சியில், புதிதாக கட்டிய அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு  9 மாதமே ஆன நிலையில், அப்பள்ளி வகுப்பறையின்  மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் விடுமுறை நாளில் நடைபெற்றுள்ளதால்,  அந்த வகுப்பறையில் படிக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், திமுக அரசை கடுமையாக சாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் … Read more

TVK: "விஜய்க்குக் கூடிய கூட்டத்தைவிட நடிகர் அஜித்துக்கு இரண்டு மடங்கு கூடும்" – ராஜேந்திர பாலாஜி

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தொடர்ந்து மாநாடு, அறிக்கைகள் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை `உங்க விஜய் நா வரேன்’ என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியும், 20-ம் தேதி நாகப்பட்டினத்திற்கும் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் செல்லும் இடங்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. TVK Vijay அதனால், சில இடங்களில் … Read more

பல மொழிகளைக் கொண்ட ‘சென்னை ஒன்’ செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொதுமக்கள் அரசுபேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில்,   பல மொழிகள் பேசும் மக்களின் வசதிக்காக பல மொழிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள  ‘சென்னை ஒன்’ செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.  இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் சென்னை ஒன் மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  … Read more

H-1B விசா சர்ச்சை: சீனா K விசா அறிமுகம் – நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவிற்கான கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில் H-1B விசா மாதிரியான புது விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது சீனா. அமெரிக்கா: H-1B விசா பிரச்னை H-1B விசா என்பது அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் ஆகிய துறைகளில் எக்ஸ்பெர்டாக இருக்கும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா வழங்கும் விசா ஆகும். பிறநாட்டு திறமையாளர்களை அமெரிக்காவின் வளர்ச்சிகாக பயன்படுத்திக் கொள்ள 1990 ஆம் ஆண்டு இந்த விசா அறிமுகப்படுத்தியது. … Read more

சிவகங்கை அரசு மாணவிகள் விடுதியில் மதமாற்றம்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு – வீடியோ

சென்னை: சிவகங்கை அரசு மாணவிகள் விடுதியில், அங்கு தங்கியிருந்து படித்துவரும் மாணவிகளிடம் மதமாற்றம் செய்யப்படும் படத்தை வெளியிட்டு, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாடு அரசு சமீபத்தில், அரசு மாணவ மாணவிகளின் விடுதிகளின் பெயரை, சமூக நல விடுதி என பெயர் மாற்றியது. இந்த நிலையில், சிவகங்கை பகுதியில் செயல்பட்டு வரும் மாணவிகள் விடுதியில், மதமாற்றம் செய்யப்படும் வீடியோவை நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி … Read more

`அப்பாவுக்கு துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றியவர்!’ – அன்புமணியை விளாசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மாவட்டம் மற்றும் நகர தி.மு.க சார்பில், `ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “தி.மு.க-வின் தொண்டர்கள் கொள்கை வீரர்களாக இருக்கின்றனர். கொரோனா காலத்தில் நாடே முடங்கியிருந்த நேரத்தில், களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்கள் தி.மு.க-வினர். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்தார்கள். தற்போது புதிதாக ஒரு நடிகர் வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் … Read more