உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்டார் மோடி – வீடியோ

டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது பிரதமர் இல்லத்தில்  சிந்தூர் மரக்கன்றுகளை நட்டி தண்ணீர் ஊற்றினார். பிரதமர் மோடி, டில்லியில் தனது இல்லத்தில்   ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார்.   அவரே  மரத்தை வைக்கும் வகையில்,  மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று (ஜூன் 5)  உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ல் உலக சுற்றுச்சூழல் … Read more

`எங்க ரசிகர்கள்லயே சிலருக்கு இதுபத்தி தெரியாம இருக்கு!’ – பவுண்டேஷன் மூலம் படிப்புக்கு உதவும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகமெங்கும் முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களின் பிள்ளைகளின் உயர்படிப்புக்கு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். பிளஸ் டூ தேர்வில் 85 சதவிகிதத்துக்கு மேல் எடுத்திருக்கும் ரஜினி ரசிகர்களின் பிள்ளைகளுக்கு  இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனவாம். உதவி என்றால் கல்லூரிப் படிப்பென்றால் படிப்பு முடிகிற வரை ஒவ்வொரு ஆண்டும் முழுக் கட்டணத்தையும் பவுன்டேஷனிலிருந்தே நேரடியாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கட்டி விடுகின்றனர். கலை, அறிவியல், தொடங்கி பொறியியல் மருத்துவம் வரை எந்தப் படிப்பாக இருந்தாலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனவாம். … Read more

ஜூன் 7-ந்தேதி மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை:  ஜூன்  7-ந்தேதி (சனிக்கிழமை)  தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கழகத் தலைவர், முதலமைச்சர்  ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக 07.06.2025 அன்று காலை நடைபெறும் என்றும், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பு … Read more

மீண்டும் பவுனுக்கு ரூ.73,000-த்தை தாண்டிய தங்கம் விலை! – எவ்வளவு தெரியுமா?

தங்கம் | ஆபரணம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,130 ஆக விற்பனை ஆகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.73,040 ஆக விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.114 ஆக விற்பனை ஆகி வருகிறது. … Read more

காயிதே மில்லத் பிறந்தநாள்: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

சென்னை: காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் . இவரது  130-வது பிறந்தநாள் இன்று   மாநிலம்  முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.  அதுபோல அவரது பிறந்தநாள் அரசு விழாவாகவும் தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை … Read more

RCB வரவேற்பு: கூட்டநெரிசல்; உடுமலை இளம் பெண் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்சிபி அணி வீரர்களைப் பார்க்க சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் புதன்கிழமை மாலை குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 11 … Read more

#உலக சுற்றுச்சூழல் தினம்: இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

#உலக சுற்றுச்சூழல் தினம்  இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு,  இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 5ந்தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில், ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றர். அதற்காக நகரமயமாக்கம் காரணமாக சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும்,  … Read more

2025 யெஸ்டி அட்வென்ச்சர் ட்வீன் ஹைட்லைட் உடன் வெளியானது

யெஸ்டி அட்வென்ச்சர் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதுப்பிக்கப்பட்ட இரட்டை பிரிவு கொண்ட முகப்பு விளக்குடன், புதிய நிறங்கள், பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் பாடி கிராபிக்ஸ் பெற்று ரூ. 2.15 லட்சம் முதல் ரூ.2.27 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. Yezdi Adventure முந்தைய ஒற்றை முகப்பு விளக்கிற்கு பதிலாக தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள இரட்டை பிரிவில் வலதுபுறத்தில் ரிஃபெலக்டர், அடுத்து புராஜெக்டர் LED ஹெட்லைட் ஆனது இடதுபுறத்தில் இடம்பெற்று பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி … Read more

“2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." – ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த தகவலை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 2027-ம் ஆண்டு வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்… “2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது. … Read more

சின்மயி பாடிய பாடல் தக்லைஃப் ஆல்பத்தில் இணைப்பு

சென்னை பாடகி சின்மயி பாடிய முத்தமழை பாடல் தக்லைஃப் ஆல்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்‘. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் … Read more