கர்நாடகா : அமைச்சர் கே.என். ராஜண்ணா ராஜினாமா… கட்சிக்கு எதிரான கருத்துக்களால் சலசலப்பு…

கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்த தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பி இருந்தார். ராகுல் காந்தி வெளியிட்ட மகாதேவபுரா வாக்காளர் பட்டியல் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பேற்றபின் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் உருவானது. அப்படியிருக்க, அந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பது குறித்து மாநில தலைமை அப்போது கண்ணைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? … Read more

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி கைது

புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்ற்னர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், … Read more

பணமோசடி வழக்கில் சிக்கிய மகனை பாதுகாக்க சட்டம் பயிலும் 90 வயதான தாய் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. ஹீ என்ற 90 வயதான தாய் தனது 57 வயதான மகன் லின்னை பாதுகாக்க முயற்சித்து வருகிறார். ஜெஜியாங் மாகாணத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை ஜூலை 30 அன்று கடைசியாக நடைபெற்று இருக்கிறது. லின் உள்ளூர் தொழிலதிபரை மிரட்டி 141 கோடி ரூபாய் ( 117 மில்லியன் யுவான்) பறித்ததாக … Read more

பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது…

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) சமீபத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தது என்று நாசாவின் science.nasa.gov வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து வெறும் 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்பா சென்டாரி விண்மீன் தொகுப்பில் பூமியைப் போன்ற ஒரு கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாக தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. ஆல்பா சென்டாரி விண்மீன் தொகுப்பில் மூன்று நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவை ஆல்பா சென்டாரி-ஏ, ஆல்பா சென்டாரி-பி மற்றும் ப்ராக்ஸிமா … Read more

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்ற்னர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், … Read more

SIR: “தோளோடு தோள் நிற்கிறோம்…" – இந்தியா கூட்டணியின் ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவு!

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம், முறைகேடான வாக்காளர் பட்டியல், தேர்தலின்போது வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மேலும், தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை போராட்டப் பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட எம்.பி-கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் ஆணையத்தை … Read more

எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன்…

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட்.(M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025)  தொடங்கி உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025) முதல் 20.08.2025 வரை நடைபெறவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  உயர்கல்வித் துறை அமைச்சர்,  தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 … Read more

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் வழக்கமான அலுவல்கள் இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, தொடர்ந்து 14வது நாளாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார். மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று … Read more

Indra: "இந்த விஷயத்தில் ரஜினி சாரை விட சுனில் சார் ஒரு ஸ்டெப் மேல" – வசந்த் ரவி

சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இந்திரா. திரில்லர் படமான ‘இந்திரா’ ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீடு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இநிகழ்ச்சியில் பேசிய வசந்த் ரவி, “‘இந்திரா’ படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். இந்திரா சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் … Read more

கற்பனையிலேயே சோமபான வாசனையை முகர்ந்த அதிசயம்! – பறம்பின் பெருங்காவியம் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அறுக நாட்டு சிற்றரசன் செம்பனின் அரண்மனையில் இருந்து பாரியின் குலப்பாடல் வரை புலவர் கபிலரோடு சேர்ந்து  பறம்பு நாட்டிற்கு சென்று பறம்பு மக்களோடு வாழ்ந்து பண்டைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஆதிகால மனிதர்களின் நாகரிகத்தையும் வார்த்தைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் அவர்கள் கொடுத்த மரியாதையும் அதை காப்பாற்ற … Read more