ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாத இலவச சேவை வழங்க திட்டம்

டெல்லி ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதம் இலவச சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.   உலகின் பல்வேறு நாடுகளில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது.. இது செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும். கடந்த வாரம் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து குளோபல் மொபைல் பெர்சனல் … Read more

அமைச்சரை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க சொல்லும் கோவா மருத்துவர்

பனாஜி கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர் ருத்ரேஷ் கூறி உள்ளார். கோவா மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய போது கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். பத்திரிகையாளர் ஒருவரின் தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் வைட்டமின் … Read more

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? – விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு ஆய்வறிக்கையைக் கடந்த 2023-ல் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார். கீழடி – அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசால் திருப்பியனுப்பப்பட்டது. … Read more

உள்ளூரில் எலான் மஸ்க்கிடம் திணறும் டிரம்ப் அடுத்ததாக ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராகிறார் ?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பூமராங் ஆகும் நிலையில் அடுத்ததாக அவர் ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது, வர்த்தக வரி உயர்வு, அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது என்று பல்வேறு நடவடிக்கைகளில் சிக்கலை சந்தித்து வரும் டிரம்ப் மற்றொரு பக்கம் அரசியல் சீட்டாட்டத்தில் சீட்டே பிடிக்கத் தெரியாத எலான் மஸ்க்கிற்கு தனது நிர்வாகத்தில் சகல அதிகாரம் பொருந்திய … Read more

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' – கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும் விதமாக இலவச வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளைத் தொடங்கவிருக்கிறது கர்நாடகா சுகாதாரத் துறை. Ambulance முதன்முறையாக சி.வி. ராமன் நகர் பொது மருத்துவமனையில் இருந்து தொடங்கப்படுகிறது இந்தத் திட்டம். முதற்கட்டமாக புற்றுநோய் நோயாளிகள், முதியவர்கள், மூளை ரத்தக்கசிவு மற்றும் இதய பிரச்னைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பவர்களுக்கு இந்த வகையில் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது. இதுபோன்ற … Read more

அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்கள் மீதான உக்ரைன் தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டம் : பெபே எஸ்கோபர்

ரஷ்யாவின் அணு ஆயுத தொடர்புடைய இடங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் பெபே எஸ்கோபர் கூறியுள்ளார். கடந்த வாரம் ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா விமானங்கள் சேதமடைந்தது இந்த தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், ரஷ்யா மீதான தாக்குதலில் CIA மற்றும் MI6 – அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறை நிறுவனங்களின் நேரடி தொடர்பு இருப்பதாக ரஷ்யா சந்தேகிப்பதாக எஸ்கோபர் … Read more

TVK : 'விஜய்யை 14 ஆண்டுகளாகத் தெரியும்…' – தவெக-வில் இணைந்த முன்னாள் IRS அருண் ராஜ் பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ். இணைப்பு நிகழ்விலேயே அவருக்கு கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து அலங்கரித்திருக்கிறார் விஜய். யார் இந்த அருண் ராஜ்? அவரின் பின்னணி என்ன? அவரைச் சுற்றி வட்டமடிக்கும் கேள்விகளோடு பேட்டிக்காக அணுகினோம். நிறையவே பேசினார். TVK Arun Raj ஐ.ஆர்.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விஜய்யின் கட்சியில் இணைந்திருக்கிறீர்கள். யார் இந்த அருண் ராஜ்? உங்களைப் பற்றிய பின்னணியை … Read more

21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் மே மாதம் 20ம் தேதி இந்த இளம்ஜோடி தேனிலவுக்குச் சென்றது. அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற இவர்கள் பின்னர் அங்கிருந்து திடீரென மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் மே 23க்குப் பிறகு தொடர்பு கொள்ள … Read more

"ஒவ்வொரு கேப்டனும் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்; ஆனால்…" – ஆஸி., முன்னாள் கோச் புகழாரம்!

உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்ற கேப்டன்களில் முக்கியமானவரான தோனியை, தங்களின் ‘Hall of Fame’ வீரர்களின் பட்டியலில் சேர்த்து கவுரப்படுத்தியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC). ஐ.சி.சி-யின் Hall of Fame பட்டியலில் இணையும் 11-வது இந்திய வீரரான தோனிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தோனி – ICC Hall of Fame அந்த வரிசையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் தோனியைப் புகழ்ந்திருக்கிறார். ஐ.சி.சி … Read more