தர்மஸ்தலா: "என் கையால் 80 உடல்களைப் புதைத்தேன்" – கோயில் முன்னாள் ஊழியர் பரபரப்பு தகவல்

கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கோவிலின் முன்னாள் ஊழியர் அளித்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ஊழியர் இந்தியா டுடே செய்தித் தளத்துக்குச் சில திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். விசாரணை 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் 70-80 உடல்களைத் … Read more

79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…. வீடியோ

டெல்லி:  நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, செங்கோட்டையில் 12வது முறையான இன்று காலை கொடியேற்றினார். அப்போது அவர் மூவர்ண நிற ஸ்டோலுடன் கூடிய காவி நிற தலைப்பாகையை அணிந்திருந்தார்.  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசியலமைப்பு சட்டம் தான் தேசத்திற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது என்று கூறினார். நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில்,  21 குண்டுகள் … Read more

டெல்லி: மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் பலி

புதுடெல்லி, டெல்லியில் பெய்து வரும் பருவமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில், டெல்லியின் கல்காஜி பகுதியில் மழையால் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால், வெள்ள நீரில் வாகனங்கள் சிரமப்பட்டு சென்று கொண்டிருந்தன. அப்போது, பராஸ் சவுக் பகுதியருகே, எச்.டி.எப்.சி. வங்கியருகே, பழமையான பெரிய வேப்ப மரம் ஒன்று வாகனங்களின் மீது நேற்று விழுந்தது. இந்த சம்பவத்தில், பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்தனர். அவர்களில் சுதீர் … Read more

79th Independence Day: "அணு ஆயுத மிரட்டல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!" – செங்கோட்டையில் மோடி

“அணு ஆயுத மிரட்டல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது” – மோடி “ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள் எதிரியின் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் பதிலளித்துள்ளனர். ஏப்ரல் 22-ம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொன்றனர். முழு தேசமும் கோபமடைந்தது. பாகிஸ்தானில் நமது ஆயுதப்படைகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மிகவும் பரவலாக இருந்தது. அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இனியும் அது பொறுத்துக்கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து … Read more

ஆளுநர் தேநீர் விருந்து…! தவெக தலைவர் விஜய் கலந்துகொள்வாரா?

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, பதிவு செய்யப்பட்ட  அரசியல் கட்சிகள் என்ற காரணமாக ஆளுநர் அளிக்கும்  தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்துகொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள  பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில்,  இன்று மாலை ஆளுநர் மாளிகையில் … Read more

உ.பி.: தெருவோர கடையில் நொறுக்குத்தீனியில் கஞ்சா கலந்து விற்ற நபர்

லக்னோ, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் மோகன்லால்கஞ்ச் புறநகர் பகுதியில் பிரமோத் சாஹூ (வயது 42) என்பவர், தெருவோரத்தில் சிறிய கடை ஒன்றை போட்டு நொறுக்குத்தீனிகளை விற்று வந்துள்ளார். அதில், வறுத்த உருளை கிழங்கு வறுவல், பொறித்த முட்டைகள் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்திருக்கிறார். இதற்கு நன்றாக வரவேற்பும் இருந்துள்ளது. ஆனால், யாருக்கும் தெரியாமல் அவற்றில் கஞ்சாவை தடவி விற்றுள்ளார். சட்னியில் கூட கஞ்சாவை கலந்து விற்றிருக்கிறார். கஞ்சாவை பொட்டலம் போட்டும் தனியாக விற்று வந்திருக்கிறார். இதுபற்றி … Read more

டெல்லி: பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கெலாட் காலமானார்

புதுடெல்லி, பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கெலாட். மேற்கு டெல்லிக்கு உட்பட்ட மதியாலா தொகுதிக்கான முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 60. அவருடைய மறைவு செய்தியை பற்றி அறிந்ததும் மருத்துவமனை மற்றும் அவருடைய வீட்டுக்கு ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் குவிந்தனர். டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா, மேற்கு டெல்லி எம்.பி. கமல்ஜீத் ஷெராவத், டெல்லி அரசின் மந்திரி பர்வேஷ் சாஹிப் சிங் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் அவருடைய குடும்பத்தினருக்கு … Read more

ரூ.76,000 விலையில் BAAS மூலம் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டரை வாங்கலாம்.!

Battery-as-a-Service (BaaS) திட்டத்தின் மூலம் ஏதெர் எனர்ஜியின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ,75,999 மற்றும் 450 வரிசையின் ஆரம்ப விலை ரூ.84,341 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு கிமீ பயணத்துக்கு ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு 60% வரை மதிப்பு உத்தரவாதத்துடன் திரும்பப் பெறும் (BuyBack) திட்டத்தையும், பேட்டரி, மோட்டார், மோட்டார் கன்ட்ரோலர், டேஷ்போர்டு, சார்ஜர் மற்றும் முக்கிய 7 பாகங்களை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட வாரண்டியை 5 ஆண்டுகள் … Read more

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 9 பேர் கைது

இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி, குகி ஆகிய 2 சமூகத்தினருக்கு இடையே இனக்கலவரம் ஏற்பட்டது. 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இதுவரை இந்த கலவரத்தில் 260 பேர் பலியாகி உள்ளனர். கலவரத்தால் ஆட்சியில் இருந்த பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. … Read more