தலைப்பு செய்திகள்
சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு!
வரும் செப்டம்பர் 9ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் உடல் நலனைக் காரணமாகக் கூறி பதவி விலகிய ஜகதீப் தன்கரின் இடத்தை நிரப்பவிருக்கிறார் ராதாகிருஷ்ணன். சி.பி. ராதாகிருஷ்ணன் இதற்கு முன் வருகின்ற செவ்வாய் கிழமை பாஜக நாடாளுமன்ற குழுவை ராதாகிருஷ்ணன் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. திருப்பூர் டு மகாராஷ்டிரா சந்திரபுரம் … Read more
மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான வெளிநாட்டு இந்தியர்!
இந்தியாவை சேர்ந்த பரிசிட் பலூசி என்பவர் துபாயில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். அவர் மும்பையில் வந்து இறங்கியவுடன் இந்தியாவில் முதலில் ஒரு தேனீர் குடிக்கலாம் என்று கருதினார். உடனே அருகில் இருந்த ஃபைவ் ஸ்டார் நட்சத்திர ஹோட்டலுக்கு தேனீர் குடிக்க சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை நன்றாக வரவேற்று தேனீர் வழங்கினார்கள். ஆனால் தேனீர் குடித்து முடித்த பிறகு அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பில்லை … Read more
'இந்த' சூழலில் எப்படி ஓட்டு திருட்டுகள் நடக்கும்? – தலைமைத் தேர்தல் ஆணையர் கேள்வி!
பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது. இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நாள்களுக்கு நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதன்முறையாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதில் அளித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அனைத்து கட்சிகளும் சமம் இதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானேஷ் குமார், “இந்திய … Read more
PMK: 'எனக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்; ஆனால்…' – ராமதாஸ்
திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளைக் கொண்டாட தைலாபுரம் சென்றிருந்தார் அன்புமணி. அப்போது, அங்கே ராமதாஸையும் சந்தித்து இருந்தார் அன்புமணி. ஆனால், ‘இருவருக்கும் இடையேயும் பேச்சுவார்த்தை நடந்ததா?’ என்பது தெரியவில்லை. இந்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது… பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் “எங்களுடைய 36 தீர்மானங்கள் ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல… அது தமிழ்நாட்டின் அனைத்து சமுகத்திற்கானதும் ஆகும். எப்போதும் … Read more
கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங்கு ரோடு ஏவிபி பள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, ஆட்டோ அருகில் சென்று பார்த்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்வதும், அதனால், வலியால் அவர் துடித்து வருவதும் தெரியவந்தது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் … Read more
சம்மத உறவு குற்றமாகாது…
சம்மத உறவு குற்றமாகாது… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. 18 வயது பூர்த்தியாகாத ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் ஒருவனுக்கு (காதலனுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். ஆனால் சம்பந்தப்பட்ட பெண் 18 வயது பூர்த்தியாக வெறும் 19 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதோடு பெண்ணின் சம்மதத்தின் பெயரிலேயே உறவு நடந்திருக்கிறது … Read more
PMK: ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு; 'நோ' அன்புமணி; காந்திமதி பிரசன்ட் – என்ன நடக்கிறது?
இன்று திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. கடந்த வாரம், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லாபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் மேடையில் ராமதாஸிற்காக ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமதாஸ் அதில் பங்கேற்கவில்லை. மேலும், அந்தக் கூட்டத்தில், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. காந்திமதி ‘நோ’ அன்புமணி இந்த நிலையில் தான், இன்று … Read more
மணிப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு; ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
புதுடெல்லி, நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல. கணேசன் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மாலை 6.23 மணியளவில் காலமானார். அவருக்கு கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்தவரான இல. கணேசன் 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து தமிழகத்தில் அக்கட்சியின் அடித்தள விரிவாக்கத்திற்கு உதவினார். அமைப்பு செயலாளர், தேசிய செயலாளர், … Read more