ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' – இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்20) ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாட உள்ள முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கோலி இல்லாதது வருத்தமே என்று இங்கிலாந்து … Read more

தமிழ்நாட்டில் 14 தொழிற்பேட்டைகள் – 6லட்சம் பெண் தொழிலாளர்கள்: சென்னையில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Ambattur Industrial Estate Manufacturer’s Association (AIEMA) சார்பில்  அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி இன்று முதல் (19.06.2025) முதல் 23.06.2025 வரை   நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட உள்ள 16 லட்சம் பெண் தொழிலாளர்களில், 6 லட்சம்  பெண் தொழிலாளர்கள்  தமிழ்நாட்டில் உள்ளனர்”   என்றும், இந்தியாவில் பதிவு … Read more

மனைவி மீது தீராத காதல்.. 93 வயது முதியவருக்கு கிடைத்த இன்ப பரிசு

மும்பை, மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் அம்போரா ஜஹாகிர் கிராமத்தில் உள்ள ஒரு எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே. இவருக்கு 93 வயது ஆகிறது. இவரது மனைவி சாந்தாபாய். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் வயதான தம்பதி தனித்தே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். முதுமையை அடைந்தாலும் நிவ்ருத்தி ஷிண்டேவுக்கு தனது மனைவி மீதான காதலின் வயது மட்டும் இளமையாகவே இருந்தது. சமீபத்தில் இவர் தனது மனைவிக்கு ஒரு அன்பு பரிசு வழங்க விரும்பி … Read more

ராமாபுரம் விபத்து: மெட்ரோ பணிகளை மேற்கொண்டு வரும் L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம்….

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக பணி செய்த  L&T நிறுவனத்திற்கு  மெட்ரோ ரயில்நிர்வாகம் ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும்,   கவனக்குறைவாக பணியாற்றிய 4 பொறியாளர்கள் மெட்ரோ திட்ட பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், ராமாபுரம்  பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள … Read more

விமான விபத்தில் பாலிசிதாரர், வாரிசு மரணம்.. இழப்பீடு அளிப்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் திணறல்

ஆமதாபாத், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், பொதுமக்கள் 24 பேரும் என 270 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு … Read more

“தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உதவிய முதல்வர்'' – IITக்கு தேர்வான பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கல்வி முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான இத்திட்டங்களின் பலனாக அனைத்துதரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு … Read more

பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது! உயர்நீதிமன்றம்…

மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அரசு முறையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர். திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.  அவரது மனுவில், , … Read more

மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த இன்ஸ்டாகிராம்.. என்ன நடந்தது..?

ரேபரேலி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் “குட்பை சாரி அம்மா அப்பா” என்று கூறி மாத்திரைகளின் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். 16-ந்தேதி இரவில் 7.42 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பதிவு குறித்து, … Read more

“உண்மையில் இந்தியா – பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' – மீண்டும் ட்ரம்ப்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் இறுதியில் (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே மோதல் அதிகரித்தது. பின்னர், இருநாடுகளும் மோதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. ஆனால், வர்த்தகத்தை முன்வைத்து இந்த மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டுவந்தேன் … Read more