மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணம்…

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையங்குடியைச் சேர்ந்த சசிகுமார் (50) கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியா சென்றிருந்த நிலையில் இன்று காலை அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். கோலாலம்பூரிலிருந்து இன்று அதிகாலை திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் மூலம் பயணம் மேற்கொண்ட அவர் பயணத்தின் நடுவில், கடுமையான அசௌகரியத்தை அனுபவித்ததாகவும், தனது இருக்கையில் சரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. விமானக் குழுவினர் உடனடியாக அவருக்கு உதவ … Read more

'இப்படி ஒரு தேர்தல் வரலாறு… இதில் என்னைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா?' – எடப்பாடி பழனிசாமி பதிலடி

எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” திரு. ஸ்டாலின் அவர்களே… நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். “உங்களுடன் ஸ்டாலின்” ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் , ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா? ஸ்டாலின் … Read more

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் தீக்குளித்து மரணமடைந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் நானும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற உறுதியை அளித்தேன். நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, … Read more

Tesla Model Y on-road price – டெஸ்லா மாடல் ஓய் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை.!

இந்தியாவில் அதிகாரப்பூர்வ விற்பனையை துவங்கியுள்ள எலான் மஸ்கின் டெஸ்லாவின் எலக்ட்ரிக் காரான மாடல் ஓய் (Tesla Model Y)எஸ்யூவி ரூ.58,89,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துவங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ.22,220 வசூலிக்கப்படும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்குள் ரூ3,00,000 செலுத்த வேண்டும் மேலும் இந்த தொகை திரும்ப பெற முடியாத (non-refund) வகையில் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. முதலில் டெஸ்லா மாடல் Y விலைப்பட்டியல் … Read more

Zomato: ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், பும்ரா.. விளம்பரம் டிரெண்டிங் ஆனது ஏன்? – CEO சொன்ன காரணம்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது புதிய விளம்பரமான ஃப்யூவல் யுவர் ஹஸ்டல் (Fuel your Hustle) மூலம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களான நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் வீரர் பும்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த விளம்பரம் வெற்றியின் பின்னணியில் உள்ள கடின உழைப்பு மற்றும் முயற்சியை எடுத்துக்காட்டு விதமாக அமைந்துள்ளது. ஸொமேட்டோ ஸொமேட்டோவின் இந்த விளம்பரம் கிரிக்கெட் வீரர் … Read more

கமலஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை கமலஹாசன் மாநிலங்களவை எம் பி ஆனதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூலை 24 ஆம் தேதியுடன் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைவதால் இந்த, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்து அனைவருமே போட்டியின்றி … Read more

நீலகிரி: சிறுத்தைகளைக் காவு வாங்கும் சுருக்கு கம்பிகள்; என்ன செய்யப்போகிறது வனத்துறை?

வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப்‌ போல் ஊடுருவி வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் வேட்டை கும்பல் ஒருபுறம் என்றால், நாட்டு வெடி மற்றும் சுருக்கு வலை கம்பிகள் மூலம் முயல், காட்டுப்பன்றி, கடமான்களை வீழ்த்தும் உள்ளூர் கும்பல் மறுபுறம் எனப் போட்டிப்போட்டு வனவிலங்குகளை அழித்து வருகின்றனர். சுருக்கில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை தேயிலைத் தோட்டங்களில் வைக்கப்படும் சுருக்கு வலை கம்பிகளில் புலி, சிறுத்தை போன்ற … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டம்….

டெல்லி: ஜூலை 21ந்தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அனைத்து கட்சி கூட்டம்  வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்,  தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா  உங்ளபட 8 மசோதாக்கள் தாக்கல் … Read more

ஜீப் மெர்டியன், காம்பஸ் ட்ரெயில் எடிசன் வெளியானது | Automobile Tamilan

கூடுதல் ஆக்செரீஸ் மற்றும் பாடி கிராபிக்ஸ் பெற்று ட்ரெயில் எடிசன் என்ற பெயரில் ஜீப் காம்பஸ் மற்றும் மெர்டியன் எஸ்யூவிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த பதிப்பில் வருடாந்திர சர்வீஸ் பராமரிப்பு திட்டம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. Jeep Compass and Meridian Trail Edition Compass Trail MT: ரூ. 25.41 லட்சம் Compass Trail AT: ரூ. 27.41 லட்சம் Meridian Trail MT: ரூ. 31.27 லட்சம் Meridian Trail AT: ரூ. 35.27 லட்சம் … Read more

Divorcee camp: “விவாகரத்தான பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்த முகாம்..'' – கேரளப் பெண் சொல்வதென்ன?

விவாகரத்து என்பது ஒரு தனிப்பட்ட முடிவாக இல்லாமல் சமூகம் சார்ந்து இருக்கிறது. விவாகரத்து பெறும் பெண்களுக்காக ஒரு முகாமை உருவாக்கி இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறார் ரஃபியா அஃபி. பிரேக்கப் ஸ்டோரி என்று அழைக்கப்படும் இந்த முகாம் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவாகரத்து பெற்ற, துணையிடமிருந்து பிரிந்த அல்லது கணவனை இழந்த பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான, மகிழ்ச்சியான இடமாக இது இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தங்களின் மனதில் இருக்கும் அழுத்தங்களையும், கடந்த கால வாழ்க்கை பற்றிய … Read more