5-வது மாடியில் இருந்து விழுந்த நாய்… சிறுமியின் உயிரை பறித்தது

தானே, மராட்டிய மாநிலம் தானேவில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமி மீது 5-வது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மும்ப்ரா பகுதியில் உள்ள பரப்பான சாலையில் 4 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 5-வது மாடியில் இருந்து திடீரென நாய் ஒன்று கீழே சென்று கொண்டிருந்த சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தார். … Read more

செப்டம்பர் 3 அன்று காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்.

டெல்லி வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி காலியாக உள்ள் 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் போட்டியிட்டு வென்றனர். மேலும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். எனவே அசாம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக … Read more

வங்காளதேச சூழல் இந்தியாவில் ஏற்படலாம் – குர்ஷித் பேச்சு; பா.ஜ.க. கடும் கண்டனம்

புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், சசி தரூர் உள்ளிட்டோர் நேற்றிரவு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இதில் பேசிய குர்ஷித், மேலோட்டத்தில் பார்க்கும்போது எல்லாம் இயல்பாக இருப்பது போல் தோன்றும். ஆனால் வங்காளதேசத்தில் நடப்பது இந்தியாவிலும் கூட நடைபெறலாம் என கூறினார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் உடன் இருந்த சசி தரூர் இதுபற்றி கூறும்போது, குர்ஷித் என்ன அர்த்தத்தில் பேசினார் என என்னால் கூற முடியவில்லை. ஆனால், வங்காளதேசம் … Read more

விகடன் வேண்டுகோள்… வயநாடு பேரழிவு… கண்ணீர் துடைக்க, கரங்கள் கோப்போம்!

வயநாடு பேரழிவு கேரள மாநிலம், வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலா, மேப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்திருக்கின்றன. இதுவரையில், 250-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. `இன்னும் எத்தனையோ?’ என்கிற அச்சம் வாட்டி வதைக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தது மட்டுமல்லாமல் வாழ்விடங்களை, உறவுகளை, வாழ்வாதாரங்களை இழந்து வழி தெரியாமல் திகைத்துக் கிடக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாட்டுக் குடும்பங்களும் அடக்கம். அந்த மக்களுக்கான வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டமைக்க, மறுவாழ்வு வழங்க பெரும் … Read more

கைலாசநாதன் புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்பு

புதுச்சேரி இன்று புதுச்சேரி ஆளுநராக கைலாசநாதன் பதவி ஏற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் புதுசேரி புதிய ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். நேற்று மதியம் … Read more

தமிழக சாலைத் திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க தயார் – நிதின் கட்கரி

புதுடெல்லி, மாநிலங்களவையின் திமுக எம்.பியான ராஜேஷ்குமார் கேள்வி நேரத்தில் பேசுகையில், 2023 மற்றும் 2024 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ.657.53 கோடி இது தமிழ்நாட்டுக்கு போதுமான நிதி இல்லை. எனவே, தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் ரூ.2000 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எந்த குறையும், காலதாமதமும் இல்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, “தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி … Read more

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடதமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த … Read more

வினேஷ் போகத் 140 கோடி மக்களின் இதயங்களில் சாம்பியனாக இருக்கிறார் – ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு 140 கோடி மக்களின் … Read more