வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு தடை :  அவகாசம் கோரும் உரிமையாளர்கள்

சென்னை தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை என்பதால் உரிமையாளர்கள் அவகாசம் கோரி உள்ளனர். நாளை முதல் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி கிடையாது எனப் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்க தடை … Read more

இதென்னய்யா கூத்து.. எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற மறுநாளே பதவியை ராஜினாமா செய்த சிக்கிம் முதல்வர் மனைவி!

காங்டாக்: சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுடன் நடத்தப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக பிரேம்சிங் தமாங் பதவியேற்றார். சிக்கிம் Source Link

Live Today: ''தீவிரமாக பணியாற்ற அக்கறையுடன் அறிவுறுத்தினார்’’: தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்

தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். Yesterday as I met our Honorable Home Minister Sri @AmitShah ji in AP for the first time after the 2024 Elections he called me to ask about post poll … Read more

வரும் 22 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ் டி கவுன்சில் கூட்டம்

டெல்லி வரும் 22 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 9-ஆம் தேதி பதவியேற்றார். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடர்பான அறிவிப்பு … Read more

நேருக்கு நேர் மோதிய லாரி, தனியார் பேருந்து! 3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலி! தென்காசியில் ஷாக்

தென்காசி: தென்காசியில் தாது பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று தனியார் பேருந்து மீது மோதியதில் 3 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மலை மற்றும் ஆறுகளிலிருந்து வளங்களை அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே கேரளா மினரல் வியாபாரிகள் தமிழகத்திற்கு வந்து வளங்களை அள்ளி செல்கின்றனர். பல நேரங்களில் இதில் முறைகேடுகள் Source Link

பெற்றோருடன் சென்ற காதல் மனைவி; தேடிச் சென்ற இளைஞன் விரட்டியடிப்பு – 3 நாளில் முடிந்த திருமண வாழ்க்கை

வேலூர், சத்துவாச்சாரிக்கு அருகேயுள்ள அலமேலுமங்காபுரம் அழகிரி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன் – வயது 21. இவரும், காட்பாடி அருகேயுள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துவந்தனர். இது தெரியவர இளம்பெண்ணின் பெற்றோர் கண்டித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், எதிர்ப்பைமீறி கடந்த 3-ம் தேதி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன். இரண்டு நாள்கள் தேடி அலைந்த பிறகே மகள் தங்கியுள்ள வீட்டை பெற்றோர் கண்டுபிடித்தனர். இளைஞன் விரட்டியடிப்பு ( … Read more

பாஜக முன்னாள் முதல்வருக்கு பாலியல் தொல்லை வழக்கில் பிடி வாரண்ட்

பெங்களூரு பாஜகவை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பாலியல் வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா, 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார், சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் எடியூரப்பா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியின் தாய் … Read more

திருமண ஆசை காட்டி உடல் உறவு.. ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என சொல்ல முடியாது- அலகாபாத் ஹைகோர்ட்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியதாக இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என சொல்ல முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமண ஆசைக்காட்டி இளைஞர்கள் ஏமாற்றும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. ஆனால், இதேபோன்று எல்லா நேரங்களிலும் ஆண்கள் மீதே Source Link

Darshan: ரசிகர் கொலை வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள்… கைதுசெய்யப்பட்ட நடிகை பவித்ரா யார்?

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காமாட்சி பாளையா சாலையோரத்தில் ஜூன் 9-ம் தேதி காலை இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில், இந்த சடலமானது காமாட்சி பாளையாவிலுள்ள வினய் கவுடா என்பவரின் வீட்டிலிருந்து கிளம்பிய காரிலிருந்து வீசப்பட்டிருப்பது அப்பகுதி சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்திருக்கிறது. தர்ஷன் முதற்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்த இளைஞர் ரேணுகா சுவாமி (30) என்றும், மருந்தகத்தில் வேலைபார்த்துவந்த இவருக்குத் திருமணமாகி ஓராண்டாகும் நிலையில், இவர் … Read more

ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்தோனேசியா நில நடுக்கம்

வடக்கு சுலவேசி இன்று இந்தோனேசியாவின் வடக்கு கலவேசி மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தப்பகுதி கடற்கரையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய அலைகளி இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசிய நேரப்படி இன்று … Read more