வங்காள தேசத்தில் இந்தியர்களின் நிலைமையை கண்காணித்து வருகிறோம் – ஜெய்சங்கர்

புதுடெல்லி, வங்காள தேசம் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- இந்தியா – வங்காள தேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கம் பல பத்தாண்டுகளாகவும், பல அரசுகளுக்கு இடையேயும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் அங்கு போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 5 ம் தேதி, ஊரடங்கு … Read more

ஒலிம்பிக் : மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் மகளிர் மல் யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இத்தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இன்று இந்த தொடரில் மகளிர் மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வினேஷ் போகத், உக்ரைனின் ஒக்ஸானா லிவாச் உடன் மோதினார். இந்த போட்டியில் இருவரும் … Read more

நள்ளிரவில் பரபர.. வங்கதேசத்தில் அமையும் இடைக்கால அரசு! தலைமையேற்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது அமைதியற்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே விரைவில் அங்கு அமையும் இடைக்கால அரசை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகாவது அங்கே வன்முறை மெல்லக் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது அண்டை Source Link

வயநாட்டில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதம்

வயநாடு, வயநாடு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள். சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே ராணுவத்தினர் பெய்லி பாலம் அமைத்தனர். இதன் மூலம் … Read more

Paris Olympics Live Updates : `இறுதிப்போட்டியில் வினேஷ் போகத்; அரையிறுதியில் வீழ்ந்த ஹாக்கி அணி!'- Day 11 Updates

ஹாக்கி அணி தோல்வி! ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கடைசி நொடி வரை போராடி இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி. இதனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை எதிர்கொள்ள வேண்டும். இந்தியா பின்னடைவு! ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 1-2 என பின்னடைவு. ஹாக்கியில் இந்தியா முன்னிலை! ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியின் முதல் கால்பகுதி முடிந்திருக்கிறது. இந்திய அணி 1-0 என முன்னிலை! இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்! … Read more

வங்கதேசத்தில் வன்முறை வெறியாட்டம்… நட்சத்திர ஓட்டலுக்கு தீ… 24 பேர் உயிருடன் எரிப்பு… 50 பேர் உயிர் ஊசல்…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார். இருந்தபோதும், அங்கு வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது. 300க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மேலும் பலர் இறந்துள்ளனர். அவாமி லீக் கட்சியின் ஷாஹின் சக்லதாருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததை அடுத்து அங்கு தங்கியிருந்த 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தவிர 50 … Read more

Brinda Review: நரபலி, தொடர் கொலை – சூப்பர் காப் த்ரிஷா! திரில்லர் ஓகே, ஆனா ஏமிரா இதி பாலிடிக்ஸ்?

பிருந்தா (த்ரிஷா கிருஷ்ணன்) ஹைதராபாத் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக (SI) பணிபுரிகிறார். அங்கே அவரது திறமையை அனைவரும் நிராகரிக்கிறார்கள். குறிப்பாக அந்த காவல்நிலையத்தில் முதன்மை பொறுப்பாளரான இன்ஸ்பெக்டர் சாலமன் (கோபராஜு விஜய்) ஆணாதிக்கத்துடன் நடந்து கொள்கிறார். அங்கே பிருந்தாவின் திறமையை மதிக்கும் ஒரே நபர் மற்றொரு சப் இன்ஸ்பெக்டரான சாரதி (ரவீந்திர விஜய்) மட்டுமே. இதற்கு மத்தியில் பிருந்தாவின் பால்ய கால நினைவுகள் அவரை மனதளவில் தொந்தரவு செய்கின்றன. இப்படியான சூழலில் பிருந்தாவின் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட … Read more

மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தனக்கு துணையாக தேர்ந்தெடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு துணையாக மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மட்டுமே போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்ததை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 4000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அவரை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். … Read more

சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ள சிட்ரோன் நிறுவனத்தின் பாசால்ட் கூபே எஸ்யூவி மாடலில் இடம்பெற்று இருக்கின்ற எஞ்சின் விபரம் மைலேஜ் மற்றும் முக்கியமான அனைத்து தகவல்களையும் தொகுத்து முழுமையாக இங்கே அறிந்து கொள்ளலாம். சிட்ரோன் காரில் எந்த இன்ஜின் இடம்பெறப் போகிறது என்றால் ஏற்கனவே இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற C3 மற்றும் C3 ஏர்கிராஸ் என இரண்டு மாடல்களிலும் இடம்பெற்று இருக்கின்ற 1.2 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் … Read more

டிராவல்ஸ் நிறுவனம் மூலம் ரூ.20 கோடி மோசடி; 2 ஆண்டுகள் தலைமறைவு… தஞ்சை நபர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் வயது 42. இவர் அய்யம்பேட்டையில் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அப்பகுதியில் பலராலும் அறியப்பட்ட பிரபல நிறுவனமாக இவருடைய டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தன்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவேன், ரூ.1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 2,500 வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளார். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஹக்கீம் … Read more