சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல்.. 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

டெல்லி: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. உச்சான கலான் தொகுதியில் பிரிஜேந்திர சிங் களமிறக்கப்பட்டுள்ளார். ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் இதுவரை 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானா Source Link

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்திற்கு கத்திரி வைத்துள்ள CBFC சில மாற்றங்களுடன் வெளியிட U/A சான்றிதழ் வழங்கியுள்ளது

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் நடித்த எமர்ஜென்சி படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் பல காட்சிகளுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் இருந்து 3 காட்சிகளை நீக்கவும் 10 மாற்றங்களை செய்யவும் கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தப் படத்திற்கு சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு … Read more

இரவில் போராட்டக் களமான கொல்கத்தா.. மருத்துவர் பலாத்கார மரணத்துக்கு நீதி கேட்டு திரண்ட பெண்கள்!

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ரிக்‌ஷாக்காரர்கள், ரிக்‌ஷாக்களை இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி மருத்துவர் மரணத்திற்கு நீதி கோரி கொல்கத்தாவில் ஞாயிறுதோறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் Source Link

Monkeypox: இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி? – தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்!

குரங்கு அம்மை: இந்தியாவில் குரங்கு அம்மையால் இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்… தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஆகஸ்ட் 14 அன்று உலக சுகாதார அமைப்பால் அவசர நிலையாக `குரங்கு அம்மை தொற்று’ அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் இன்று முதலாவதாக ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குரங்கு அம்மை பரவி வந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் … Read more

ரூ.2000க்கு மேல் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி? நாளை கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்…

டெல்லி: நாளை 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாக  வெளியான  தகவலின்படி,  ரூ.2000க்கும் மேல்  டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால், அதற்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் வழங்கப்படுமா என்பது தெரிய வரும். ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முடிவு செய்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது மக்களிடையே … Read more

லக்னோ கட்டிட விபத்து.. பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று மாலை இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் கடை மற்றும் குடோன்கள் செயல்பட்டு வந்தன. கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் அங்கிந்து பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நிலவரப்படி 5 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து இன்று அதிகாலையில் … Read more

`விஜய் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்…' – நடிகர் சங்க கூட்டத்தில் கார்த்தி

‘நடிகர் விஜய் நடிகர் சங்கத்திற்காக நிதியாக ரூ.1 கோடி கொடுத்துள்ளார்’ என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் கார்த்திக் பேசியுள்ளார். இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காலை 10 மணியிலிருந்தே நடந்து வருகிறது. இந்தப் பொதுக்குழு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் மன்சூர் அலிகானும் கலந்துக்கொண்டுள்ளனர். நடிகர் … Read more

பாம்பன் பாலத்தையும், தனுஷ்கோடியையும் சுற்றிப்பார்க்க சுற்றுலா கப்பல் சேவை! தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை: ராமேஷ்வரம் பகுதியில் உள்ள சுற்றுலா தலமான பாம்பன் பாலத்தையும், தனுஷ்கோடியையும் சுற்றுலா பயணிகள் கப்பலில் சென்று சுற்றிப் பார்க்கும் வகையில் சிறிய ரக  பயணிகள் சுற்றுலா கப்பல் சேவையை கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுல் பயணிகள் பெரிதும் விரும்பும் ராமேஸ்வரம் பாலம் மற்றும் தனுஷ்கோடி உள்பட  அதன் சுற்றுப்புறங்களில் புதிய சுற்றுலா பகுதிகளை கண்டுகளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடல் வாரியம் முடிவு செய்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அளப்பரிய  அனுபவத்தை அளிக்க கப்பல் … Read more

திருப்பதி தேவஸ்தான கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காலையில் சுப்ரபாதம் பாடி விநாயகரை துயிலெழுப்பி, அதன்பின்னர் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. மாலையில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் மலைப்பாதைகளில் உள்ள கோவில்களிலும் … Read more