தலைப்பு செய்திகள்
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…
சென்னை: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என ஜி ராம் ஜி திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். தனது ஒனர் பாஜக செய்தது சரியென்றால் வெளிப்படையாக ஜி … Read more
விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளது – கனிமொழி எம்.பி
புதுடெல்லி, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளதாக கனிமொழி … Read more
ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம் – விரைவில் மற்ற மாநிலங்களில்…! மத்திய அரசு தகவல்!
டெல்லி: ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம் செய்யப்படுகிறது. இது மத்திய அரசின் துறையின்கீழ் செயல்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை சேர்ந்த சேவை வாகனங்கள் மீது, அவ்வப்போது கட்டண உயர்வு, சேவை முறைகேடு என புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அதற்கு மாற்றாக மத்தியஅரசு ஜனவரி 1ஆம் … Read more
மக்களவையில் மசோதா நகல்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி
புதுடெல்லி, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த … Read more
திருப்பரங்குன்றம்: "எதற்காகவும் வேண்டாம்!" – பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!
கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது. சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் மதநல்லிணக்கத்தைச் சீர்குழைத்ததாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் இந்நிலையில், தீபம் ஏற்றத் தடை விதித்த திமுக அரசைக் கண்டித்து பூர்ண சந்திரன் … Read more
2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை: கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் குழு அமைத்தது திமுக தலைமை…
சென்னை: 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அறிக்கை தயாரிக்கும் பணியில், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். அதில், தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பழனிவேல் தியாகராஜன், … Read more
தாய், தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன் – உ.பி.யில் பயங்கரம்
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஷியாம் பகதூர்(வயது 62). இவரது மனைவி பபிதா(வயது 60). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் அம்பேஷ் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை அவரது பெற்றோர் ஏற்காததால், குடும்பத்திற்குள் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி அம்பேஷ், தனது சகோதரிகளில் ஒருவரான … Read more
திருப்பூர் மாநகராட்சி: `குப்பையிலும் கமிஷன்; ஊழல் செய்வது மட்டுமே குறிக்கோள்'- அண்ணாமலை கடும் தாக்கு
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சியின் சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். அதில், 14 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் … Read more