ரேபிஸ் நோய் பரவுவதை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதி

கேரளாவில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (விலங்கு பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள்) விதிகள் 2023 இன் விதிகளின்படி, நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய உள்ளூர் அமைப்புகளுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி அமைச்சர் எம்.பி. ராஜேஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் ஜே. சின்சுராணி ஆகியோர் ஜூலை 16 ஆம் தேதி, உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெருநாய் கடித்தல் மற்றும் ரேபிஸால் இறப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் … Read more

பள்ளிகளில் விழிப்புணர்வுக்காக 'ஆயில்' போர்டுகள் வைக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தல்

புதுடெல்லி, பள்ளி மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ‘சுகர் போர்டுகள்’ எனப்படும் விழிப்புணர்வு பலகைகளை வைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சுகர் போர்டுகளில் மாணவர்கள் தினந்தோறும் எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போர்டுகளை பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கூடும் இடங்களான உணவகம், ஹால் உள்ளிட்ட இடங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. … Read more

மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" – மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், சுந்தரேசன் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகத்திற்குச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுந்தரேசனிடம் பேசினோம், “நான் மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு டி.எஸ்.பியாக 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றேன். அப்போதிலிருந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை … Read more

நடிகர் சல்மான் கான் ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக லாபம் ஈட்டுகிறார்…

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ஒரு சில மாதங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக தனது வீட்டை புதுப்பித்த சல்மான் கான், தனது பிறந்தநாள் மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது ரசிகர்களைப் பார்க்க வந்து நிற்கும் பால்கனியின் கண்ணாடிகளை குண்டுதுளைக்காத வகையில் மாற்றியமைத்துள்ளார். … Read more

திரைப்பட பாணியில்… ஆஸ்பத்திரியின் ஐ.சி.யு.வுக்குள் புகுந்து கைதி பயங்கர கொலை: வைரலான வீடியோ

பாட்னா, பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பாட்னாவின் பராஸ் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென உள்ளே புகுந்து நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சிறை கைதியை சுட்டு விட்டு தப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தில், 5 பேர் துப்பாக்கிகளை இடுப்பில் மறைத்து வைத்தபடி இன்று காலை ஆஸ்பத்திரியின் உள்ளே … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கும் தேஜஸ்வி யாதவ்

  பாட்னா பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்காளார் பட்டியல் திருத்த்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் இந்த பணியின் மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியற்ற பெயர்கள் நீக்கப்படும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பதிவு இருப்பின் அது சரி செய்யப்படும், தகுதிவாய்ந்த … Read more

'இனி Unreserved-ல் 150 டிக்கெட்கள் மட்டும் தான்…' – இந்திய ரயில்வேயின் புதிய அறிவிப்பு

இந்திய ரயில்வே துறை, ரயில் பயணங்களில் புதிய புதிய மாற்றங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகின்றது. டிக்கெட் புக்கிங் நாள் குறைப்பு, ஆதார் இணைப்பு… வரிசையில், தற்போது லேட்டஸ்டாக வேறொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில் வெறும் 150 டிக்கெட்டுகள்… அதன் படி, இனி முன்பதிவு இல்லா பெட்டிகளில், தலா ஒரு பெட்டிக்கு வெறும் 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். இதுவரை, இந்த டிக்கெட்டுகளுக்கு இப்படி கட்டுப்பாடுகள் இருந்ததில்லை. சோதனை முயற்சியாக, இந்த நடைமுறை முதன்முதலாக புது டெல்லியில் … Read more

எரிம்லை வெடித்து சிதறியதால் ஐஸ்லாந்தில் பீதி

ரெய்க்ஜேன்ஸ் நேற்று ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்து சிதறியது பிதியை கிளப்பி உள்ளது/ சுமார் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் ஐஸ்லாந்து நாட்டில் உள்ளன. இவற்றில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று ஒரு எரிமலை வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கி பாய்ந்து வருகிறது. தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக … Read more

திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி – திணறும் போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். இவரின் பாட்டி வீடு அந்தப்பகுதியில் உள்ளது. கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்ததும் சிறுமி, தன்னுடைய பாட்டி வீட்டுக்கு தனியாக நடந்துச் சென்றார். பாட்டி வீட்டுக்குச் செல்லும் பாதை ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியாகும். அதனால் சிறுமி, புத்தக பையை சுமந்தப்படி பாட்டி வீட்டுக்கு நடந்துச் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், … Read more