அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் மரணம்…

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய இசை கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கக்கேரா நகரத்தைச் சேர்ந்த தபேலா கலைஞரான சாம்ராட் கக்கேரி (45) கலிபோர்னியாவின் மிடில்டவுன் அருகே ஹார்பின் ஸ்பிரிங்ஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயங்கர விபத்தில் மரணமடைந்தார். கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் சாம்ராட் கக்கேரி, கலிபோர்னியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி, … Read more

வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்… கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறிவுக் களஞ்சியமாக விளங்கினாலும், தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பராமரிப்பின்றி விடப்பட்ட இந்தக் கட்டடம், மேற்கூரை உதிர்ந்து, சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின் வயர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், மின்சார விபத்துகளை ஏற்படுத்தும் அபாயகரமான சூழலில் உள்ளது. … Read more

ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற வாழ்த்தும் பிரதமர் மோடி

டெல்லி உடல்நலமில்லாததால் ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் உடல் நலனை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்தார். அதன்படி ராஜினாமா கடிதத்தை நேற்று இரவு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து அவரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் இன்று ஏற்றுக்கொண்டார். … Read more

நாளை நெல்லையில் மின் தடை

நெல்லை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை திருநெல்வேலியில் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதுட் தமிழக மின் வாரியம், ”திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணைமின் நிலையங்களில் நாளை (23.7.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் … Read more

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சில தினங்களில் செயல்பட இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணி தொடங்கப்பட்டபோது, அதை வைத்து பணம் சம்பாதிக்க மோசடிக் கும்பல் திட்டமிட்டது. அதன்படி, `ஜிப்மர் மருத்துவமனைக்கு செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். மத்திய அரசு நிறுவனம் என்பதால் கை நிறைய சம்பாதிக்கலாம். மத்திய … Read more

ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அகதிகளாக வந்த ரோகிங்யாக்கள், வங்கதேசத்தினர் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளின் வாக்காளர் உரிமையை நீக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றும் நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. பீகாரில் வசிக்கும்,  … Read more

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய் | Automobile Tamilan

2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிறப்பான வரவேற்பினை தக்கவைத்துக் கொண்டு தற்பொழுது இரண்டாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா, க்ரெட்டா என்-லைன், க்ரெட்டா எலக்ட்ரிக் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. iX25 என அறியப்பட்டு பயணத்தை துவங்கிய க்ரெட்டா அமோகமான வரவேற்பினை நடுத்தர எஸ்யூவி சந்தையில் பெற்று ஒட்டுமொத்தமாக 12.68 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில், இந்தியா தவிர இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சுமார் 13 நாடுகளுக்கு க்ரெட்டா … Read more

ஜகதீப் தன்கர் ராஜினாமா: "நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்" – பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் – இதுதான் இந்திய அரசியல் களத்தின் தற்போதைய ‘பரபர’ டாப்பிக். ஜகதீப் தன்கர் ராஜினாவும், சந்தேகங்களும்! உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக ஜகதீப் தன்கர் கூறியிருக்கிறார். ஆனால், இவரது ராஜினாமாவிற்குப் பின்னால், ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஜகதீப் தன்கர் மோடி பதிவு இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு … Read more

‘திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’! எடப்பாடியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்…

மன்னார்குடி: திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’  என்று கூறியுள்ள விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்,  திருவாரூர்  பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசார எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் சென்ற இபிஎஸ், கொல்லுமாங்குடியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து … Read more