Tamil News Live Updates : அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி குறித்த வழக்கு; இன்று முக்கிய தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி குறித்த வழக்கு; இன்று முக்கிய தீர்ப்பு! செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் … Read more

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது…

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் பவர் டில்லர்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 77 பவர் … Read more

கலவரத்தை மேலும் தூண்டியதாக புகார்! எடிட்டர்ஸ் கில்டு நிர்வாகிகள் மீது மணிப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மேலும் மோதல்களை உருவாக்க முயன்றதாக எடிட்டர்ஸ் கில்டு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 4 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மணிப்பூரில் தேர்தல் ஆதாயத்திற்காக பெரும்பான்மையாக இருக்கும் மெய்டெய் சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலுக்குள் கொண்டுவருவதாக பாஜக தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது. இதனையடுத்து எதிர்பார்த்ததை போல பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தை Source Link

Royal Enfield 350cc bikes Tamil Nadu on-road price – ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 350cc பைக்குகளின் வரிசை இப்பொழுது முழுமையாக J-series என்ஜின் பெற்றுள்ளதால் புல்லட் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350, மற்றும் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை தொகுத்து அறிந்து கொள்ளலாம். பொதுவாக, அனைத்து 350சிசி என்ஃபீல்டு பைக்குகளில் உள்ள J-series என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டுள்ளது. 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , … Read more

Euro Tech – Stethoscope: அன்று மர உருளை, இன்று AI டெக்னாலஜி; இது உயிர்காக்கும் ஸ்டெதாஸ்கோப்பின் கதை!

ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் ஸ்டெதாஸ்கோப் (Stethoscope). அன்று 1816-ம் வருடம் செப்டம்பர் மாதம் 16ம் நாள். இலையுதிர்காலத்தின் சில்லென்ற ஒரு மாலை வேளையில், பிரான்ஸின் அழகிய வீதியொன்றின் ஓரமாக ஓர் அழகான வாலிபர் வாக்கிங் சென்றுகொண்டு இருக்கிறார். அப்போது … Read more

தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் கட்டணம் அதிரடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில்  பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒருபுறம் மக்களுக்கு இலவசங்களை வாரியிறைத்து வரும் நிலையில், மற்றொருபுறம் மக்கள்  தலையில் இடியை இறக்கி வருகிறது.  சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு என … Read more

10 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விடிவுகாலம்| Central government approves 10 percent internal quota: Holiday for government school students

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டு முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் 37 பேர் எம்.பி.பி.எஸ்.,பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் நடைபெறும் மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த கோப்பு கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் … Read more

Motivation Story: `அந்த ஆசிரியர் செய்தது சரிதானே?!' – ஒரு நெகிழ்ச்சிக்கதை!

`இந்த உலகில் வாழ்வதற்காக என் தந்தைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த உலகில் மிக நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.’ – மாவீரன் அலெக்ஸாண்டர்.   இன்று ஆசிரியர் தினம். நம் எல்லோருக்குமே ஆசிரியர் ஒருவராவது என்றென்றும் நினைவில் இருப்பார். `வாத்தியாருன்னா இப்பிடி இருக்கணும்ப்பா…’ என்று காலமெல்லாம் கொண்டாடவைக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். அதனால்தான் கடவுளுக்கும் முந்தைய இடத்தை ஆசிரியருக்குக் கொடுக்கிறோம். ஒரு மனிதர், தன் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்ட ஆசிரியரைப் … Read more

இன்று தமிழகத்தில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது 

சென்னை சென்னையில் இன்று 386 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த நாளில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மாநில அரசு சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., … Read more