"சனாதனம் என்ற கோட்பாட்டை எதிர்ப்பதை, மொத்த இந்துக்களையே எதிர்ப்பதாக பாஜக திரிக்கிறது" – திருமாவளவன்

சென்னையில் நேற்று முன்தினம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்” என்று பேசியிருந்தார். உதயநிதியின் இத்தகைய பேச்சு, பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் – பாஜக இதன் காரணமாக பா.ஜ.க தரப்பு தொடர்ந்து, உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் போலீஸில் புகாரளிக்கப்படும் என்று கூறிவருகிறது. … Read more

கானா பாடல் பாடி அசத்திய சுதா ரகுநாதன்…

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் போட். முழுக்க முழுக்க கடலில் நடப்பது போல் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்திற்காக பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன் ஒரு கானா பாடலை (ஃபியூஷன்) பாடியுள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் குறித்து சிம்புதேவன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நண்பர் @GhibranVaibodha இசையில்.. இசை … Read more

சனாதனம்: “அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்!'' – முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்!

தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பா.ஜ.க தரப்பிலிருந்தும், வலதுசாரி அமைப்புகள் தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் அந்த வரிசையில் தற்போது டெல்லி மாநில பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான குழு ஒன்று, டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் … Read more

நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர் கைது!

நெல்லை: நெல்லை பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று பாஜக சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில், இந்த கொலை தொடர்பாக திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர்  பிரமுகரான பிரபு என்பவர்  சரண்டர் ஆகி  உள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தி.மு.க., நிர்வாகி பிரபு  என்பவர், பாஜகவின் போராட்ட அறிவிப்பை தொடர்பாக வக்கீல்கள் முன்னிலையில் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து போலீசை கண்டித்து பா.ஜ. … Read more

நிலவில் மீண்டும் மெதுவாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்: ஏன் தெரியுமா?| Vikram Lander Exceeds Chandrayaan-3 Mission Goals, With A Hop

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி, அதனை வெற்றிகரமாக தரையிறங்கி இஸ்ரோ சோதனை செய்துள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. நிலவின் தென்துருவத்தில், விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதற்குள் இருந்த பிரஜ்ஞான் ரோவர் சாதனம், நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வில் … Read more

Honda Elevate – ₹11 லட்சத்தில் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் வெளியிட்டுள்ள புதிய எலிவேட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக கடும் போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Honda Elevate suv உறுதியான  கட்டுமானத்தை பெற்று, பாதசாரிகள் பாதுகாப்பு, மல்டி ஆங்கிள் … Read more

“தங்கம்;100 கிராம் முதலீடு செய்தால் 126 கிராம் கிடைக்கும்" சொல்வது உண்மையா..? முதலீடு செய்யலாமா?

‘நீங்க 100 கிராம் தங்கத்தை முதலீடு செஞ்சீங்கன்னா, வருச கடைசியில் 105 கிராம் கிடைக்கும். இதைய 10 வருசத்துக்கு தொடர்ந்து பண்ணீங்கன்னா, 26 கிராம் எக்ஸ்ட்ரா தங்கம் கிடைச்சிருக்கும். அப்போ ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? யோசிச்சு பாருங்க’ என்ற வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பது ‘கோல்ட் லீசிங்’ முறை. இதெல்லாம் உண்மைதானா என்றுதானே கேட்கிறீர்கள்? இது முற்றிலும் உண்மைதான். கோல்ட் லீசிங் என்றால் உங்களிடம் இருக்கும் … Read more

மழைநீர் வடிகால் பணிகள் 45நாளில் முடிக்க தலைமைச்செயலாளர் கெடு!

சென்னை:  மழைநீர் தேங்குவதால் பாதிப்புள்ளாக்கி வரும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளுதல், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில்,   நீர்வள ஆதாரம், நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை செயலர்கள், மாநகராட்சி … Read more

தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடாதே! காவிரி ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம்!

மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா விவசாயிகளின் இப்போராட்டத்தால் மாண்டியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை சொற்ப அளவில் கர்நாடகா கடந்த சில நாட்களாக திறந்துவிட்டு வருகிறது. மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), மைசூரி கபினி அணைகளில் Source Link