நிலவில் ஊர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது பிரக்யான் ரோவர்! இஸ்ரோவின் இன்றைய அப்டேட்?

பெங்களூரு: சந்திரயான் கால்பதித்துள்ள சந்திரயான்3 லேண்டரில் இருந்து  வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும்,  லேண்டரில் இருந்து இதுவரை 8 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. 2023ம் ஆண்டு  ஜூலை 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் இருந்து சந்திரயான்-3 விண்கலம்  விண்ணில் பாய்ந்தது. சுமார் 40 நாட்கள் தொடர் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்டு … Read more

பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு கெடு.. பறந்த நோட்டீஸ்.. கொடைக்கானலில் என்ன நடக்கிறது?

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒருவாரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தளம் ஆகும். மிக அமைதியான அழகிய சுற்றுலா தளங்களை கொண்ட இந்த பகுதியில் அவ்வளவு எளிதாக சொகுசு பங்களாக்களை Source Link

பெங்களூரு விமான நிலையத்தில் நகரும் நடை மேம்பாலம் திறப்பு| Inauguration of moving walkway at Bengaluru Airport

பெங்களூரு:பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணியர் வசதிக்காக, முதல் முனையத்தில் இருந்து நேரடியாக வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லும் வகையில், நகரும் நடை மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளது. நாட்டின் அதிகளவில் பயணியர் வந்து செல்லும் இரண்டாவது இடமாக, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. கடந்தாண்டு இரண்டாவது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த முனையத்தில் ஆக., 31ம் தேதி முதலே, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

மிசோரம் ரெயில்வே பால விபத்து: உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு

அய்ஸ்வால், மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் கடந்த புதன் கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 23 தொழிலாளர்கள் பலியாகினர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயம் அடைந்த 3 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரிப்பதற்காக 4 பேரை கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய … Read more

தர்மன் சண்முகரத்னம்: சிங்கப்பூர் அதிபர் தேர்தல் ரேஸில் முன்னிலை வகிக்கும் தமிழர் யார்?!

உலக அளவில் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழரகள், இப்போது பல நாடுகளில் அரசியலிலும் ஆளுமை செலுத்தி வருகின்றனர். அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் போன்றோரும் பதவி வகித்து வரும் நிலையில், தற்போது தமிழர்களுக்கு நெருங்கிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தேர்தலுக்கு தமிழரான தர்மன் சண்முகரத்னம் போட்டியிடவுள்ளார். சிங்கப்பூர் சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 13-ம் … Read more

சுவாமிமலையில் இருந்து டில்லிக்கு அனுப்பப்பட்ட உலகின் மிகப் பெரிய நடராஜர் சிலை

சுவாமிமலை உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை ஜி 20 மாநாட்டு அரங்க முகப்பில் டில்லிக்கு சுவாமி மலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் மாதம் 9-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ‘ஜி-20’ மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான நடராஜர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் … Read more

மதுரை: நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் பெரும் தீ விபத்து – 6 பேர் பலி எனத் தகவல்

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ரயிலின் ஒரு பெட்டியல் ஏற்பட்ட தீ தொடர்ந்து மற்ற பெட்டியிலும் பரவியதாக சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசத்தை மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17-ம் தேதி தமிழகம் வந்துள்ளனர். ரயிலில் தீ விபத்து … Read more

இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் –  பிரதமர் சந்திப்பு

பெங்களூரு இன்று பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்திக்க உள்ளார். நிலவை ஆராய்ச்சி செய்யச் சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ)  விண்ணில் செலுத்தி இருந்தது. அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்குத் தரை இறங்கி பெரும் சாதனை படைத்ததது. இத்திட்டத்திற்கான கட்டளையிடும் பணிகள் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு அருகே பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாடு … Read more

ஓணம் பண்டிகைக்கு பிரமாண்ட கொண்டாட்டம்| Onam is a grand celebration

பாலக்காடு:கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி-, கல்லுாரிகளில் பல்வேறு போட்டிகள், கலை நிழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்தனர். கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகை நாளை, 27ம் தேதி முதல், 29 தேதி வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முன்னதாக, கடந்த, 20ம் தேதி முதல் 10 நாட்கள் பூக்கோலமிட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பாலக்காட்டில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், ஓணம் பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடினர். மாவேலி மன்னரை … Read more

விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதை நாசா ஒத்திவைப்பு

வாஷிங்டன் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இன்று  இந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் விண்கலம் செலுத்தப்பட இருந்தது. கடைசி நேரத்தில் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு நாளை காலை 3.27 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்துள்ளன. நாசா தனது அறிக்கையில் நாசாவிற்கான … Read more