நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

சென்னை நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.   இந்த கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக சுமார் 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு  நடத்தப்படுகிறது. கடந்த ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய முதல் … Read more

ஜன்தன் கணக்குகள் 50 கோடியை கடந்திருப்பது முக்கியமான சாதனை – பிரதமர் மோடி

நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தவும், அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்கள் நேரடியாக மக்களை சேரவும் ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கும் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை தற்போது 50 கோடியை கடந்து விட்டதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் 56 சதவீதம் பெண்களுக்குரியது என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடிக்கு மேல் உயர்ந்திருப்பதற்கு பிரதமர் … Read more

புதிதாக 72 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி, இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 548 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனாவில் இருந்து 60 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 171 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் … Read more

சி.ஏ.ஜி. அறிக்கை விவகாரம்: 93 சதவீத வழித்தடங்களில் 'உடான்' திட்டம் செயல்படவில்லை – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பிராந்தியங்களுக்கு இடையே விமான வழித்தடங்களை ஏற்படுத்தவும், சாதாரண மக்களுக்கும் விமான போக்குவரத்தை எளிதாக்கவும் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ‘உடான்’ என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தியது. இந்த திட்டம் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘இதை நாங்கள் கூறவில்லை, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கை கூறுகிறது. அதாவது உடான் திட்டம் 93 சதவீத வழித்தடங்களில் செயல்படவில்லை. விமான நிறுவனங்களின் … Read more

ஜி 20 மாநாட்டை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறது – மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டை மத்திய அரசு தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கூறுகையில், ‘ஜி20 அமைப்பு 1999-ம் ஆண்டு உருவானது. அதற்கு பிறகு 17 நாடுகளில் இந்த அமைப்பின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவின் முறை. ஆனால் இந்த மாநாட்டை வைத்து … Read more

திமுகவின் நாளைய உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் மட்டும் ஒத்தி வைப்பு

மதுரை மதுரையில் மட்டும் நாளைய திமுக உண்ணாவிரதப் போராட்டம் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. நாளை மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே இந்த போராட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரதப் போராட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நா:அஒ மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி … Read more

Cheems: மீம்களால் சிரிக்க வைத்த வைரல் நாய் மரணம்; உரிமையாளரின் உருக்கமான பதிவு – சோகத்தில் இணையம்!

சீம்ஸ் (Cheems) என்று செல்லமாக அழைக்கப்படும் ‘Balltze’ என்ற நாய் 2010 சமயத்திலிருந்து இணையத்தில் மீம்ஸாக டிரெண்டானது. இப்படிப் பல வகை நாய்கள், பூனைகள் மீம் கதாபாத்திரங்களாகக் கொண்டாடப்பட்டாலும் அதில் சீம்ஸ் நாய்க்கு என்று தனி ஓர் இடம் உண்டு. குறிப்பாகத் தமிழிலும் சீம்ஸ் மீம்ஸ் ரொம்பவே பிரபலம். சீம்ஸ், பெர்ரோ, வால்டர் உள்ளிட்ட பல நாய்கள் இந்த மீம் கலாட்டாக்களில் இடம்பெறும். Cheems | Balltze ‘Shiba Inu’என்ற ஜப்பானிய நாய் இனத்தைச் சேர்ந்த இந்த … Read more

அமித் ஷா – பிரதமர் மோடி இமாசல பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை

டில்லி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இமாசலப் பிரதேச வெள்ளம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்ன்றனர். இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன. இதில் இமாச்சலப்பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டி வருகிறது .இதுவரை மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிந்துள்ளது., இதுவரை நூற்றுக்கும் … Read more

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூலை 2023

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் டாப் 10 இருசக்கர வாகனங்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, யூனிகார்ன், டிவிஎஸ் ஜூபிடர், ரைடர் 125 ஆகியவையும் உள்ளது. Top 10 Selling Two Wheeler–July 2023 2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் அறிமுகத்திற்கு பின்னர் டாப் 10 பட்டியலில் 40,119 ஆக யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் ஆக்டிவா 1,35,327 ஆக பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை … Read more