தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பெங்களூர்: கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் 12, 000 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் பாசனத்தை நம்பி தமிழகத்தில் ஏராளமான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து வருகிறது. முறைப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை விட குறைந்த அளவு நீரே திறந்துவிடப்படுவதால், பற்றாக்குறை நிலவுகிறது. இதனையடுத்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாகவும் கோரிக்கை … Read more

சந்திரயானை விடுங்க.. அடுத்த டார்கெட் சூரியன்! மிரட்டும் ஆதித்யா L1.. ஸ்பேஸ் ரேஸில் முந்தும் இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சமீபத்தில் நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி உலக நாடுகளின் கவனத்தை இஸ்ரோ ஈர்த்திருந்த நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 எனும் விண்கலத்தை விண்வெளிக்கு விரைவில் அனுப்ப இருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் பூமி மீது விண்கற்களின் மோதல்கள் அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். இது ஒரு Source Link

77th Independence Day Tomorrow: Intelligence Alert To Be Vigilant | நாளை சுதந்திர தினம்: உஷாராக இருக்க உளவுத்துறை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தவும், அனைவரும் ‘அலெர்ட்’ ஆக இருக்குமாறும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாடு முழுதும் நாளை (ஆக.,15) 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டையில் நாளை காலை 7:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி … Read more

கர்ப்பிணி இதயத்தில் துளை, கருக்கலைப்புக்கு கோர்ட் அனுமதி; 27 வாரத்தில் உயிரோடு பிறந்த குழந்தை!

மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் இருக்கும் சில்வாசா என்ற பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், கடந்த மார்ச் மாதம் கர்ப்பமானார். அவருக்கு ஜூலை 25-ம் தேதி கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் சோதித்தபோது, அவரது இதயத்தில் பெரிய துளை இருந்ததை கண்டறிந்தனர். உடனே வயிற்றில் இருக்கும் கருவை கலைத்துவிடுவது நல்லது என்றும், அக்கருவால் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து … Read more

Tata Punch vs Hyundai Exter – டாடா பஞ்ச் Vs ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி ஒப்பீடு., எந்த கார் சிறந்தது

டாடா மோட்டார்ஸ் பஞ்ச் எஸ்யூவி மாடலுக்கு சவால் விடுக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் நிலையில் இரு மாடல்களையும் ஒப்பீடு செய்து பல்வேறு முக்கிய விபரங்களை அறிந்து கொண்டு எந்த கார் தேர்வு செய்யலாம் என அறிந்து கொள்ளலாம். இரண்டு மாடல்களும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு பல்வேறு வசதிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் 6 ஏர்பேக்குகள், டேஷ்கேம், உள்ளிட்ட வசதிகள் பிரத்தியேகமாக பெற்றுள்ளது. சிஎன்ஜி … Read more

`சவுண்டு வச்சு பாப்போமா சவுண்டு!' – டி.எம்.எஸ் நூற்றாண்டையொட்டி உசிலம்பட்டியில் வினோத போட்டி!

தமிழகத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்துக்கு சுப நிகழ்ச்சிக்கோ, துக்க நிகழ்ச்சிக்கோ செல்லும்போது இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லவே முடியாது. ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் குழாய் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாடல் உங்களை அங்கேயே அழைத்து செல்லும். ஒலிபெருக்கிகள் அந்தளவுக்கு கிராம மக்களின சுக துக்கங்களில் ஒலிபெருக்கி அமைப்பாளர்களுக்கு முக்கிய இடமுண்டு. நகரங்களில் கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும், கிராமங்களில் இன்னும் ஒலித்துத்துக் கொண்டுதான் உள்ளது. எதையும் கொண்டாட்டமாக பார்க்கும் மதுரைக்காரர்கள் இதற்கும் … Read more

கும்பகோணம் சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து.. ஆடி தள்ளுபடிக்காக குவிந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம்

கும்பகோணம்: ஆடி மாத தள்ளுபடி விற்பனை நடைபெற்று வந்த சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்தது. கும்பகோணத்தில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி சிறப்பு Source Link

Forgiveness to AIIMS doctor who cheated on embryo eggs | கரு முட்டையில் மோசடி செய்த எய்ம்ஸ் டாக்டருக்கு மன்னிப்பு

புதுடில்லி : செயற்கை கருவுறுதலுக்காக வந்த பெண்ணின் கரு முட்டைகளை, வேறு இரண்டு பெண்களுக்கு அனுமதியில்லாமல் அளித்த, புதுடில்லி எய்ம்ஸ் டாக்டருக்கு மன்னிப்பு அளித்து தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை கருவூட்டலுக்காக, பெண் ஒருவர், 2017ல் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்து, 30 கரு முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இதில், 14 கரு முட்டைகளை, சிகிச்சைக்காக வந்த வேறு இரண்டு பெண்களுக்கு, டாக்டர் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான புகாரை விசாரித்த புதுடில்லி மருத்துவ கவுன்சில், அந்த … Read more

Tamil News Today Live: சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை..!

சென்னை: இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை..! மழை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது … Read more