நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவின் கோழிக்கோட்டில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோழிக்கோடு, கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை 6 பேருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1080 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 327 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு … Read more

“பிரதமர் மட்டும் ஒரு உரையை தமிழில் நிகழ்த்தி விட்டால்… திமுக அன்றோடு காலி!” – அண்ணாமலை பேச்சு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” பயணம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை தரப்படும் என்று திமுக ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு குடும்பத் தலைவிகள் என்றாலே ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நமக்கு … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு முயற்சித்து வருகிறது. மேலும், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்பது, எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைமையகமான  சென்னை … Read more

லக்னோவில் வீடு இடிந்து 5 பேர் பலி| 5 of family killed after house collapses in Lucknow

லக்னோ: லக்னோவில் பழைய வீடு ஒன்று இடிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். ஆலம்பாக் பகுதியில் உள்ள பழைய ரயில்வே காலனியில் நடந்த இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். லக்னோ: லக்னோவில் பழைய வீடு ஒன்று இடிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். ஆலம்பாக் பகுதியில் உள்ள பழைய ரயில்வே காலனியில் நடந்த இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் 3 பேர் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

அதிக அங்கீகாரம் பெற்ற தலைவராக தேர்வு: பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தலைவர்கள் பாராட்டு

புதுடெல்லி, உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவர்களின் பட்டியலை வட அமெரிக்க நிறுவனம் ஒன்று அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ள பட்டியலில் உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை 76 சதவீதம் பேர் அங்கீகரித்து உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தை பிரதமர் மோடி தொடர்ந்து அலங்கரித்து வருகிறார். இத்றகாக பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இது … Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை… வங்கிகள் அபராதம் விதித்தது ஏன்?

 தமிழகம் முழுவதும் ` கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பங்களை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்தது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளை தமிழக அரசு தேர்வு செய்தது. ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000: ஆன்லைன் மோசடி; போனில் விவரங்களை பகிர வேண்டாம் ! பெண்களே உஷார்..! அண்ணா பிறந்த … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பணம் கிடைக்கும் என அறிவிப்பு…

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று, அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு , காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ந்தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து, தகுதி வாய்ந்த, தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.1000 அனுப்பப்பட்டது.  ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த … Read more

காதலன் கட்டிய மஞ்சள் தாலியே போதும்.. இந்தாங்க உங்க தங்க செயின்.. கோர்ட் வாசலில் இளம்பெண் செய்த செயல்

காரைக்கால்: காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை மீட்டுத் தருமாறு பெற்றோர் தரப்பினர் கேட்ட நிலையில் அந்த பெண்ணோ தனக்கு காதலன் கொடுத்த மஞ்சள் தாலியே போதும் என கூறி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கமல்ஹாசனின் மகள் தீபிகா (19). இவர் Source Link

ஆன்லைன் சூதாட்டம் ரூ.417 கோடிசொத்துக்கள் பறிமுதல் | Online Gambling Rs 417 Crore Assets Seized

புதுடில்லி :’மகாதேவ் ஆன்லைன்’ சூதாட்ட வழக்கு தொடர்பாக, 417 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரை தலைமையிடமாக வைத்து, மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி செயல்பட்டு வருகிறது.இந்த செயலியின் நிர்வாகிகளாக, சத்தீஸ்கரின் பிலாய் என்ற பகுதியைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோர் உள்ளனர்.இந்த செயலி வாயிலாக, பினாமி வங்கிக் கணக்குகளில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக … Read more

மணிப்பூர் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு – 175 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இம்பால், மணிப்பூர் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம்வரை இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலவரத்தில் 175 பேர் பலியானதாக போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியானது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். கலவரத்தில் ெபண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடந்தன. இந்நிலையில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் … Read more