பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

புதுடெல்லி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல் மற்றும் … Read more

Apple Event 2023: ஐபோன் 15 சீரிஸ் போன்களின் விலை; ஆப்பிள் வாட்ச்; விலை குறைக்கப்பட்ட மாடல்கள்!

ஆப்பிளின் புதிய 15 சீரிஸ் ஐபோன்களான 15, 15 ப்ளஸ், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் போன்கள் நேற்று இரவு நடைபெற்ற ஆப்பிளின் ஈவென்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்பார்த்தப்படியே ‘A17’ பயோனிக் சிப், ‘USB Type C’, ஆக்‌ஷன் பட்டன், டைட்டானியம் பில்ட் உள்ளிட்டவை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரையும் ஒரு சில மாற்றங்கள் வந்துள்ளன. என்னனென்ன சிறப்பம்சங்கள் புதிதாக வந்துள்ளன, விலை எவ்வளவு என்பதைப் பற்றிப் பார்க்கலாம். ஐபோன் 15 மற்றும் 15 ப்ளஸ் … Read more

காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டெல்லி: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடுக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வருகிறது.  தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் சர்ச்சை செய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு மத்தியஅரசை வலியுறுத்தியதுடன், காவிரி … Read more

காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்கவே விடமாட்டோம்- கன்னட விவசாயிகள் ஆற்றில் குதித்து போராட்டம்!

மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரைத்திருப்பது கர்நாடகாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க விடமாட்டோம் என ஆற்றில் குதித்து கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா Source Link

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான பட்ராடா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நர்லா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் 3 பேர் காயம் அடைந்தனர். தினத்தந்தி Related Tags : காஷ்மீர்  பயங்கரவாதி  Kashmir  terrorist 

Tamil News Today Live: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா என்கிற சத்ய நாராயணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் சத்யா 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக … Read more

எம் பிக்க:ளில் 40% பேர் மீது குற்ற வழக்குகள் : ஆய்வறிக்கை

டில்லி ஆய்வு ஒன்றின் மூலம் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40% பேர் மீது குற்ற  வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளன. தேசிய தேர்தல் கண்காணிப்பகம், ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. கடைசியாக மக்களவை, மாநிலங்களவை  உறுப்பினர்கள், தேர்தலுக்காக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில், தங்கள் மீதான வழக்குகள், சொத்து மதிப்பு ஆகியவற்றைக் கூறியிருந்தனர். இவற்றை ஆய்வு செய்த மேற்கண்ட அமைப்புகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், ”மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை … Read more

காட்டெருமை விரட்ட.. குதிரை சவாரி செய்ய.. கொட்டடித்து ஆட்டம் போட.. கொடைக்கானலை அதிரவைத்த அண்ணாமலை!

கொடைக்கானல்: தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களை சந்தித்தார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபயணத்தை நேற்று கொடைக்கானலில் இருந்து தொடங்கினார் அண்ணாமலை. பழனி சட்டசபை Source Link

தமிழக பஸ்கள் மீது கர்நாடகாவில் கல்வீச்சு| Stone pelting on Tamil Nadu buses in Karnataka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாம்ராஜ்பேட், கர்நாடகாவில், தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, பெங்களூரில் நான்கு தமிழக அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. கர்நாடக அரசின் இலவச பஸ் பயண திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் தனியார் போக்குவரத்துச் சங்கங்கள்வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. நேற்று முன்தினம் மதியம் போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை … Read more

மணிப்பூர் கலவரம்: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொலை

இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ந் தேதி குகி பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டு, பின்னர் அது பெரும் கலவரமாக மூண்டது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை, வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மாநிலத்திலேயே அகதிகளை போல நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொலை … Read more