'மாமன் மச்சான்னு பொறுப்பு கொடுக்க கூடாது' – மா.செ.க்களுக்கு பாடமெடுத்த எடப்பாடி!
மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உடல்நலன் காரணமாக செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஆலோசனை கூட்டம் மாற்றி வைக்கப்பட்டது. அதன்படி, செப்.10-ம் தேதி காலை 9.30 மணிக்கு மதுரை மாநாடு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார் எடப்பாடி. மதுரை மாநாடு இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிவரை நீடித்தது. … Read more