மிசோரம், சத்தீஸ்கர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.சத்தீஸ்கா் மாநிலத்தில் நாராயண்பூா், தண்டேவாடா, பிஜபூா், கோன்டா, கேன்கா் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதற்கட்டத் தேர்தலில் 70.87 % வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு இடையே … Read more

Conspiracy to divide southern states RSS, general secretary complains | தென் மாநிலங்களை பிரிக்க சதி ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் புகார்

புஜ், ”இந்தியாவில் இருந்து தென் மாநிலங்களை பிரிக்க, தங்களை திராவிடர்கள் என்றும், வேறு மொழி பேசுபவர்கள் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா எப்போதும் ஹிந்து தேசமாக இருக்கும்,” என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலெ தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில், அதன் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலெ நேற்று பேசியதாவது: இந்தியா ஏற்கனவே, ஹிந்து தேசமாக இருக்கிறது; எதிர் காலத்திலும் அப்படியே இருக்கும். இதைத் … Read more

சட்டப்பேரவை தேர்தல்: சத்தீஷ்கரில் 70.87 % வாக்குகள் பதிவு

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கி மாலை … Read more

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா “காங்கிரஸ் வினா

டில்லி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சத்தீஸ்கரில் கடந்த வாரம் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு அரசு நீட்டிக்கும் என்று அறிவித்தார். தற்போது ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு … Read more

Heavy rain at dawn in Bangalore; Suffering from water seeping into houses | பெங்களூரில் விடிய விடிய கன மழை; வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் அவதி

பெங்களூரு : பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு முழுதும் இடியுடன் பெய்த கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், விடிய விடிய மழையிலும், குளிரிலும் மக்கள் பாதிக்கப்பட்டனர். பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. விடிட, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி, வாகன ஓட்டிகள் திணறினர். தண்ணீர் வடிய, பாதாள சாக்கடைகளை திறந்து … Read more

தீபாவளியை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி, நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில்ரூ .490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க ரூ. 16.53 கோடி புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. … Read more

சென்னையில் தீபாவளியையொட்டி18000 காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை காவல்துறையினர் 18000 பேரைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்தி உள்ளது. சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பின்வருமாறு : * சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக 1. கூட்ட நெரிசலை … Read more

City Planning Day | நகர திட்டமிடல் தினம்

ஒரு நகரம் உருவாகும் போதே எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நவ. 8ல் ‘உலக நகர திட்டமிடல் தினம்’ கடைப்பிடிக்கப் படுகிறது.குடிநீர், சாலை, மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள்,சுற்றுச்சூழல், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், அலுவலகம், குடியிருப்பு, கல்வி நிறுவனம், பஸ், ரயில் நிலையம், விமானநிலையம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை கொண்டு புதிய நகரம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஜெய்ப்பூர், காந்திநகர், புவனேஷ்வர், சண்டிகர் போன்றவை திட்டமிட்ட நகரங்கள். ஒரு நகரம் உருவாகும் … Read more

பீகாரில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த திட்டம் – நிதிஷ்குமார்

பாட்னா, பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அம்மாநில முதல்-அமைச்சர் நிதீஷ்குமார், ‘ பீகார் மாநிலம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே எங்கள் மாநிலம் முன்னேற முடியும். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டோம். அதுபோல நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். நாட்டில் இதுவரை சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் சில சாதியினர் அதிகரித்துவிட்டதாகவும், … Read more

கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.   வரும் 12 ஆம் தேதி அதாவது ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தீபாவளியைக் கொண்டாடிவிட்டு அடுத்த நாளே அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது. இதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 13ம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  … Read more