வீட்டுமனை பட்டா கேட்டு நடந்த மறியலில் டிஎஸ்பி சட்டையை பிடித்து இழுத்து வழக்கு; 9 பேர் சிறையிலடைப்பு!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். காந்தி ஜயந்தி தினமான நேற்று கறுப்புக்கொடியேற்றும் போராட்டம் நடத்துவதாக திராவிடர் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்த நிலையில், திடீரென திருவனந்தபுரம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. … Read more