“ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஒருபக்கம் கூட்டணி யாருடன் என்ற விவாதம் சூடுபறக்க… இன்னொருபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் வலுவாக எழுந்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுக-வுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூரின் “அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்ற கருத்து பரபரப்பைக் கிளப்பியது. மாணிக்கம் … Read more

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை! உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை:  சென்னையில் விதி​முறை​களை மீறி கட்​டப்படும் கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம்  அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்​துக்கு செல்​லும் வழியை மறித்து சாலை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென கடந்​த 2024ம் ஆண்டு  மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்த  உத்​தரவை  அரசு அதி​காரி​கள் அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி அவம​திப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற போலீ​ஸார் உரிய பாது​காப்பு அளிக்​க​வில்லை என … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: `திமுக மற்றும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை' – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் அரசின் மேல் முறையீடு இந்த உத்தரவு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இன்று ( ஜன.6) திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை … Read more

அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கம்போடியா சென்ற சீன இன்ப்ளூயன்சருக்கு நேர்ந்த பரிதாபம்… தங்குவதற்குக்கூட இடமின்றி தவிப்பு…

அதிக சம்பள வேலை கிடைக்கும் என்ற ஆசையில் கம்போடியா சென்ற சீன சமூக ஊடக பிரபலமான இளம்பெண் ஒருவர், அங்கு வீதியோரத்தில் வீடில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமி (Umi) என்ற பெயரில் ஆன்லைனில் பிரபலமான இந்த இளம்பெண்ணுக்கு சுமார் 58 ஆயிரம் பின்தொடர்பவர்கள் இருந்தனர். சமூக ஊடகங்களில் ஆடம்பர வாழ்க்கையை காட்டி வந்த அவர், தற்போது மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த இந்த பெண், … Read more

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெளியில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. சுஷாஷ் குமார் மனைவி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது, சமையல் அறையில் திருடன் ஒருவன் மாட்டி இருந்தான். சமையல் அறையில் எக்ஸாஸ் பேன் மாட்டுவதற்காக துளை ஒன்று போடப்பட்டு இருந்தது. … Read more

பழைய சோறு தின​மும் சாப்பிட்டால் குறை பிரசவம், புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: பழைய சோறு தின​மும்  சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம் என்றும், குறை பிரசவத்தையும்  தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். குடல் புண், வயிற்றுப் புண், மாதவிடாய் கோளாறு, பேறுகால பிரச்னைகள் என பல நோய்களுக்கு தீர்வாக பழைய சோறு அமைந்துள்ளது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை … Read more

பயணிகள் கவனத்திற்கு… ரெயில் டிக்கெட் முன்பதிவில் ஐஆர்சிடிசி கொண்டு வந்த முக்கிய மாற்றம்

ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க, பயணிகள் தங்களின் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே முன்பதிவு டிக்கெட் எடுக்கவும் ஆதார் அவசியம் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் கடந்த 4-ஆம் தேதி … Read more

பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? – ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!

வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய உணவில் இன்றும் முக்கிய இடம் பழைய சோறு கஞ்சிக்கு உண்டு. சாதத்தை இரவு இயற்கையாக மண் பானையில் புளிக்க வைத்து மறுநாள் சாப்பிடும் இந்த உணவு, எளிமையும் சத்தும் மிகுந்தது. பழங்காலத்தில் விவசாயிகளும் உழைப்பாளர்களும் உடல் சக்தி பெறவும், வெயில் காலங்களில் … Read more

9ந்தேதி தொடக்கம்: ‘உங்க கனவை சொல்லுங்க ‘ என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்   நடைபெற்றது. இதில், உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த திட்டத்தை ஜனவரி 9ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 2026ம் ஆண்டில் முதல் கேபினட் கூட்டம் இன்று (ஜனவரி 6ந்தேதி) சென்னை தலைமைச்செயலகத்தில்  நடைபெற்றது. இந்த … Read more

டெல்லியில் தொடரும் காற்று மாசு; காற்றின் தரம் 281 ஆக பதிவு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில், மாசு அதிகரிப்பதன் காரணமாக காற்று மாசு அடைந்து வருகிறது. குளிர் காலம் என வந்துவிட்டாலே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துவிடும். இந்தாண்டும் கூட அதே நிலைமை தான். கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசு உச்சத்திற்குப் போய்விட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேசிய தலைநகரில் குளிர் நிலை தொடர்ந்திருப்பதால், ஜனவரி 2 முதல் 5 வரையில் டெல்லியில் குளிர் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more