மணிப்பூர்: `நானும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்' – பழங்குடிப் பெண் கண்ணீர்
பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில், கலவரத்தின்போது பழங்குடியல்லாத மைதேயி சமூக ஆண்கள் குழுவால், பழங்குடியின குக்கி பெண்கள் இருவர் நிர்வாணக்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் கடந்த வாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய இத்தகைய சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும், பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. மோடி – மணிப்பூர் கலவரம் ஆனால், 4 நாள்களாக விவாதம் நடத்தப்படாமலே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, … Read more