மார்பக ஆரோக்கியம்; எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

மார்பகங்கள் வெறும் அழகுக்கான அடையாளம் கிடையாது. அவை ஆரோக்கியத்துக்கான காரணியும்கூட. மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணியிடம் கேட்டோம். கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா? கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா? குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தவிர்ப்போம். இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட … Read more

ஊரடங்கு உத்தரவில் 7 மணி நேரம் தளர்வு; லடாக் நிர்வாகம் அறிவிப்பு

லே, காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட போது அதில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக்கும் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. லடாக்குக்கு தனி மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே பகுதியில் அங்குள்ள லே உச்ச அமைப்பு சார்பில் கடந்த 24-ந் தேதி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். வன்முறையை தொடர்ந்து லே மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதி அறிவிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்தமுறை பலர் பதிவு செய்து உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5,870 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதேபோன்று மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக … Read more

நின்று நிதானித்து கார்/பைக் வாங்குங்கள்!

ஜிஎஸ்டி விலைக் குறைப்பால்… கார் பைக்குகளின் விலை மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்குக் குறைந்திருக்கின்றன. மின்சாரக் கார்களின் வரியில் மாற்றம் இல்லை என்றாலும்… உதிரிபாகங்களின் விலை குறைந்திருப்பதால், இவற்றுக்கும் சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. பண்டிகைக் காலம் துவங்கிவிட்டதால்… கார்/பைக்குகள் தாண்டி ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் பல பொருட்களின் விலைகளும் குறைந்திருக்கின்றன. இன்னொருபுறம் பண்டிகைக் கால போனஸும் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் கைகளில் உபரியாகப் பணம் மிஞ்சப்போகிறது. இதெல்லாம் மக்களை கார் மற்றும் பைக் ஷோரும்களை … Read more

பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் வெளியீடு

புதுடெல்லி, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை … Read more

யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்

இணையதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக யூடியூப் உள்ளது. டிவி பார்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருவதற்கு யூடியூப் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூடியூப்பில் பயனர்களும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். இந்த வீடியோக்களில் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை வீடியோவை அப்லோடு செய்தவர்களுக்கும் வழங்குவது மூலமாக யூடியூப் பிரபலமாகியுள்ளது. இதனால் சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் யூடியூப் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. வீடியோக்களை பார்க்கும் போது … Read more

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" – CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மாலை வெளியிட்ட காணொளிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அவர் வெளியிட்ட அறிக்கையில் விஜய்யின் வீடியோ அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தொண்டர்களைத் தூண்டிவிடும் விதமாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கரூர் – தவெக அறிக்கையில் … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்….

சென்னை:  வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள்  பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச போதை பொருள் கும்பலைச் சேர்ந்த  நபர்  கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. இதில் போதைபொருள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில்  கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். … Read more

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்

டெல்லி, மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் டெல்லி விமானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து … Read more

கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" – விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய், “கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கல. ஆனால், கரூர் மாவட்டத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துச்சு? CM சார் உங்களுக்கு எதாவது பழி வாங்கணும்னு எண்ணம் இருந்தா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க, எங்க கட்சித் தோழர்கள் மேல கை வைக்காதீங்க” என்று பேசியிருக்கிறார். கரூர் விஜய் பிரசாரம் … Read more