PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடைவதில் தோல்வி! இஸ்ரோ தலைவர் தகவல்.

ஸ்ரீஹரிகோட்டா: இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட புத்தாண்டு முதல் ராக்கெட்டான PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, 2026-ஆம் ஆண்டின் முதல் விண்வெளித் திட்டமாக பி.எஸ்.எல்.வி-சி62 (PSLV-C62) ராக்கெட் இன்று காலை 10:18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புவியைக் கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-என்1 (EOS-N1) உட்பட மொத்தம் 18 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் … Read more

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை! இது சென்னை சம்பவம்…

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி  பொதுமக்கள் முன்னிலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செயயப்பட்ட சம்பவம்  சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவம் குறைந்துள்ளது என காவல்ஆணையர் அருண் பேட்டி அளித்த ஒரு வாரத்திற்குள் நோயாளிகள் கூட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவமனைக்குள்  ஒருவர்  கும்பலால் ஓடஓட  வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், நோயாளிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர். … Read more

IND vs NZ: "இந்திதான் முக்கியமானது.!" – வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கர்; வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.11) வதோதராவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. ind vs nz தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் … Read more

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சேவையை  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12ந்தேதி)  கொடி அசைத்து தொடங்கி வைத்தார்‘. இளம் தலைமுறைகளை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈர்க்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி, அயலக தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக … Read more

உடல்நிலையில் முன்னேற்றம்; சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு மீண்டும் சிறையில் அடைப்பு

சபரிமலை, சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் டாக்டர்களின் ஆலோசனை பேரில் அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று அவருக்கு மீண்டும் … Read more

`இரட்டை இலை' பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் – கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்குழு கூட்டம் ஆகியவற்றில் நபின் கலந்து கொண்டார். பாஜக பொங்கல் விழா நேற்று வடவள்ளி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார். பிறகு மருதமலை, பேரூர் கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். இவற்றில் பொங்கல் … Read more

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம் விரைவில் திறக்க இலக்கு…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளில் வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5 ஆகிய வழித்தடங்களில் குறிப்பிட்ட தூரம் பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது. பூந்தமல்லி – வடபழனி இடையிலான 4வது வழித்தடத்தில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் மற்றும் நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன இதையடுத்து ஆய்வுக்குப் பின் பிப்ரவரி மாத … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 76 ஆயிரத்து 820 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24 ஆயிரத்து 368 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 77 லட்சம். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 8 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more

கூட்டணி ஆட்சி: "ஸ்டாலினும், ராகுலும்தான் முடிவெடுக்கணும்" – ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி இந்நிலையில் நேற்று (ஜன.11) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் … Read more