கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 73). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்து 2 பேர் விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவரின் செல்போனை கேட்டனர். அப்போது முகமூடி அணிந்து வந்த நீங்கள் யார்? என்று விஜயலட்சுமி கேட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், மூதாட்டியிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமியின் கழுத்தில் … Read more