கேரள ரயில் எரிப்பு : ரகசிய தகவல்களை வெளியிட்டதாக ஐஜி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம் கோழிக்கோட்டில் ரயிலில் பயணிகள் எரிப்பு விவகாரத்தில் ஐஜி விஜயனைப் பணி நீக்கம் செய்து டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் கேரளாவில் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்குச் சென்று கொண்டிருந்த விரைவுவண்டி ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.  உயிருக்குப் பயந்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக டில்லியை சேர்ந்த ஷாருக் செய்பியை மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். ஷாருக் செய்பிக்கு … Read more

கோவை பிரபல கல்லூரியில் திண்டுக்கல் நந்தினி எடுத்த கோர்ஸ் என்ன தெரியுமா? கூகுளில் வேலை கிடைக்குமாமே

Tamilnadu oi-Vishnupriya R திண்டுக்கல்: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி நந்தினி பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே, அவர் எந்த படிப்பில் சேர்ந்துள்ளார் தெரியுமா? தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 9,689 மாணவர்கள், 11 ஆயிரத்து 113 மாணவிகள் என மொத்தம் 20,802 பேர் … Read more

இரயில் நிலையத்தில் சாகச முயற்சி: நெருப்பு கோளமாக மாறிய சிறுவன்

துருக்கியில் சரக்கு ரயில் ஒன்றின் மீதிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன், மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பெட்டி ஒன்றின் மேல் ஏறி செல்ஃபி துருக்கியின் மத்திய அனடோலியா பகுதியில் அமைந்துள்ள கிரிக்கலே ரயில் நிலையத்தில் தான் மே 6ம் திகதி குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்றுள்ளனர் 15 வயதேயான முஹம்மது அலி அல்துண்டல் மற்றும் அவரது நண்பர்கள்.  Image: … Read more

,தமிழக சுற்றுலாத்துறையின் ரூ.1500 கோடி வளர்ச்சி திட்டங்கள் : அமைச்சர் ராமச்சந்திரன்

ஊட்டி தமிழக சுற்றுல்லத்துறையின் மூலமாக ரூ.1500 கோடி வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கா ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமை வகித்தார்.  விழாவின் சிறப்பு விருந்தினர்களான நீலகிரி எம்.பி. ஆ.ராசா, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். அமைச்சர் கா.ராமச்சந்திரன் தனது உரையில், “கடந்த 2 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் 349 … Read more

வீட்டில் வரவழைத்து பெண் சீரழிப்பு… லண்டனில் விசாரணையை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியர்

அவுஸ்திரேலியரான முதலீட்டு வங்கியாளர் ஒருவர் டேட்டிங் செயலியில் அறிமுகமான பெண்ணை வீட்டில் வரவழைத்து வலுக்கட்டாயமாக உறவில் ஏற்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணையை எதிர்கொள்கிறார். டேட்டிங் செயலி ஊடாக அறிமுகமான பெண் அவுஸ்திரேலியரான 31 வயது வருண் விநாயக் என்பவரே, டேட்டிங் செயலி ஊடாக அறிமுகமான பெண் ஒருவரை, அவரது ஒப்புதல் இல்லாமல் பலாத்காரம் செய்ததாக குற்ற வழக்கை எதிர்கொண்டு வருபவர். @dailymail ஆனால், குறித்த பெண்ணே தம்மை அப்படியான நிலைக்கு கொண்டு சென்றார் எனவும், சம்பவம் நடந்த … Read more

ஜப்பான் ஜி 7 மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்கப்படுமா?

ஹிரோஷிமா ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி 7  மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு மே 19 – 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதில் கலந்து கொள்ள இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். இதில் முதல் நிகழ்வாக, ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்க பூங்காவில் … Read more

UPI, Money Transaction System : Japan Consultancy | யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை : ஜப்பான் ஆலோசனை

புதுடில்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி யு.பி.ஐ., பணபரிவர்த்தனை முறையை ஜப்பான் ஏற்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனையை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.இதனை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பு கண்காணித்து வருகிறது. … Read more

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?!

2,000 ரூபாய் நோட்டுகளை, மத்திய ரிசர்வ் வங்கி 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அது முதலே 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் உலவிக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து, `2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இல்லை என்பதால், 2,000 ரூபாய் நோட்டுகள் இனி அச்சடிக்கப்பட மாட்டாது’ என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ரிசர்வ் வங்கி இந்த நிலையில், தற்போது புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவுசெய்திருக்கிறது. … Read more

ஜெய்ஸ்வால், படிக்கல் அதிரடி… பஞ்சாபை புரட்டியெடுத்த ராஜஸ்தான்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜித்தேஷ் 28 பந்தில் 44 ஓட்டங்கள் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் தவான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரப்சிம்ரன் முதல் ஓவரிலேயே … Read more

சென்னையில் மனிதர்களை கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்க அனுமதித்தால் நடவடிக்கை

சென்னை கழிவுநீர் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. இன்று  சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலைமையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் … Read more