விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய்யின் வாகனம் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். … Read more

கரூர்: “அதிமுக சார்பில் விஜயபாஸ்கர் மருத்துவமனை சென்று உதவுவார்'' – எடப்பாடி பழனிசாமி

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரையைக் காண ஏகப்பட்ட மக்கள் கூடியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர்: விஜய் பரப்புரை “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் … Read more

மத்தியஅரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு அடிபணியாது! கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில் திமுக அரசு தகவல்…

சென்னை; மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு என்றும் அடிபணியாது என  கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில்  தமிழ்நாடு அரசு தெரிவித்தள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த விசாரணையின்போது,  … Read more

சோனம் வாங்சுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு: லடாக் டிஜிபி

லடாக்: லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில். லடாக் டிஜிபி சிங் ஜம்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சோனம் வாங்சுக் கைது பற்றி அவர் விளக்கம் அளித்தார். அப்போது டிஜிபி சிங் ஜம்வால் … Read more

TVK Vijay Karur Stampede: திமுகவுக்கு விசாலமான ரவுண்டானா, விஜய்க்கு வசதியற்ற வேலுசாமிபுரம்?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல் இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தமிழக காவல்துறை வதியில்லாத வேலுசாமிபுரத்தை ஒதுக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை. … Read more

முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் விரைகிறார்…! விஜய் கரூர் பிரசார கூட்ட பலி 34ஆக உயர்வு- மருத்துவர்கள் குழு விரைவு…!

கரூர்: தவெக தலைவர் விஜய் கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தோர்எ ண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை காலை கருர் விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 குழந்தைகள், 17 பெண்கள், 10 ஆண்கள் என 34 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சமீபத்தில் கரூரில் திமுக முப்பெரும் … Read more

முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு

பெங்களுரு, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் நரகேல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தவர் ஹேமாவதி பிரகாஷ் கெடகேரி (வயது 34). இவர் தனது முகத்தில் கரும்புள்ளிகள் இருந்ததால் வெகு நாட்களாக விரக்தியடைந்து காணப்பட்டார். தான் அழகாக இல்லை என்று எண்ணி வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த ஹேமாவதி திடீரென சமையல் அறையின் … Read more

கரூர் துயரம்: “அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' – செல்வப்பெருந்தகை கோரிக்கை

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் பிரசாரம் கரூர் இந்தநிலையில் இந்த சம்பவம் “எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது” என்றும் “இத்தகைய துயர சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” … Read more

விஜய் கூட்டத்தால் 36பேர் பலி: நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் – அரசு தலா ரூ.10லட்சம் நிதி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திரக்க முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் பயணமாகிறார். விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி … Read more

‘சாதிவாரி கணக்கெடுப்பை சமூக நீதி கணக்கெடுப்பு என்று அழைக்கலாம்’ – அன்புமணி ராமதாஸ்

திண்டுக்கல், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ என்ற சொல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், அதை ‘சமூக நீதி கணக்கெடுப்பு’ என்று அழைக்கவும். மூன்று லட்சம் அரசு ஊழியர்களைக் கொண்டு, ரூ.500 கோடி பட்ஜெட்டில், சுமார் 2 மாத காலத்தில் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க … Read more