உக்ரைனியர்கள் மீது புடின் திட்டமிட்டுள்ள பயங்கர தாக்குதல்: ரஷ்யா எதிர்கொள்ள இருக்கும் மூன்று காட்சிகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது பாரிய தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார் என அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தற்கொலை படை தாக்குதல் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்த்த உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தற்போது ஓராண்டை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், அதிர்ச்சியூட்டும் இராணுவ பலவீனம், தோல்வி, திறமையின்மை, மரணம், மற்றும் படுகாயம் ஆகியவற்றில் புடின் தாக்குதல்கள் திட்டங்கள் சிக்கியுள்ளன.  உக்ரைனில் குறைந்தபட்ச இராணுவ ஆதாயங்களுக்காக புடின், ரஷ்யர்களின் … Read more

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

சென்னை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. திருத்தணி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், திருத்தணி செல்லக்கூடிய ரயில்கள் காலதாமலமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

“இன்ஸ்டாவில் மெசேஜ் செய்து, பணம் கேட்பது நான் இல்லை..!" – நடிகர் ரவி மரியா சைபர் க்ரைமில் புகார்

சென்னை, கோடம்பாக்கம் டாக்டர் கோபால மேனன் தெருவைச் சேர்ந்தவர் ரவி மரியா (51). இவர் `ஆசை ஆசையாய்’, `மிளகா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியதுடன், `சரவணன் இருக்க பயமேன்’, `தேசிங்கு ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இன்று நடிகர் ரவி மரியா தென்மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “என்னுடைய பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி ஒன்றைச் சிலர் உருவாக்கியிருக்கின்றனர். அந்த ஐ.டி … Read more

ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள்! இப்படியும் ஒரு காதல் கதை

பீகாரில் இரண்டு திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் கணவர்களை காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான நிகழ்வு நடந்துள்ளது. ஆனால், இந்த கதையில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இரு பெண்களுக்கும் ஒரே பெயர் தான் – ரூபி தேவி (Ruby Devi). நீரஜ் குமார் சிங் என்பவரும் ரூபி தேவி என்ற பெண்ணும் 2009-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்ளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஆனால் ரூபி மற்றொரு திருமணமான … Read more

ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி முறைகேடு: சோதனையில் ரூ.3 கோடி பறிமுதல்| Woman IAS, officer malpractice: Rs 3 crore confiscated in raids

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி ஜார்க்கண்டில் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைதான பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, நெருக்கமான ஒருவரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு சுரங்கத்துறை செயலராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா சிங்கால். இவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சிதிட்டத்திற்கு ஒதுக்கீடு, செய்யப்பட்ட நிதியில், முறைகேடு செய்ததாக 2022ல் … Read more

`மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் கிடையாது; ஏமாறவேண்டாம்' – மெட்ரோ நிறுவனம் எச்சரிக்கை

சென்னையின் பிரதான போக்குவரத்து சேவையில் மெட்ரோ ரயிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், “சில நபர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு பரிசோதகராக மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை என்ற பெயரில் அபராதம் வசூலிப்பதாக நிர்வாகத்துக்குத் தகவல் வந்திருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை என்ற பணியிடமே … Read more

உடற்பயிற்சி செய்யும்போது இப்படி உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என்ன?.

 உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும், ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும், உடல் கட்டமைப்பில் சாதிக்க வேண்டும் பல்வோறு காரணங்களை கொண்டு பலர் ஜிம்மிற்கு வருகின்றனர்.   இதேபோல் மருத்துவரின் அறிவுரையின் பேரிலும், சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உடல் கட்டுக்கோப்பில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவும் சிலர் வருவதுண்டு. இதில் பெரும்பாலானோர் ஜிம்மிற்கு சென்றவுடன் உடல் கட்டமைப்பு வந்து விடும் என்று கருதுகின்றனர்.   இதனால் அவர்கள் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் ஜிம்மிற்கு வந்த ஆரம்பம் முதலே அதிகப்படியான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.  இப்படி … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி வழக்கு மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

டில்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி தொடர்வதாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையைத் தொடர்ந்து மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிரன்ட் ஆஃப் … Read more