வார ராசி பலனும் பரிகாரமும்| Weekly horoscope and remedy

வெள்ளி முதல் வியாழன் வரை (3.3.2023 – 9.3.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள். மேஷம்: புதன், சூரியன், சுக்கிரன் நன்மை வழங்குவார்கள். முருகனை வழிபடுவது நல்லது. அசுவினி: எண்ணம் ஈடேறும் வாரம் இது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கு வாய்ப்புண்டாகும். வரவுகள் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். பரணி: முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் … Read more

`தமிழ்நாட்டிலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை' – தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றிவருகின்றனர். கடந்த சில நாள்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து வெளியேறுவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் ரவிசாம் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடமாநிலத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு என்பது ஜவுளித்தொழிலை … Read more

கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி உயிருக்கு அச்சுறுத்தல்., மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு

அர்ஜென்டினாவில் மெஸ்ஸியின் குடும்பத்திற்கு சொந்தமான பல்பொருள் அங்காடியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் உள்ள லியோனல் மெஸ்ஸியின் மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளனர். அதில், “மெஸ்ஸி, உனக்காகக் … Read more

பா.ம.க.வின் தேர்தல் தந்திரம்: தி.மு.க.வுடன் கூட்டணி பலமாக உள்ளது! திருமாவளவன்

திருவண்ணாமலை: திமுகவில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விரைவில் வெளியேறுவார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், திமுக உடனான கூட்டணி பலமாக உள்ளது என்றார். தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு அ.தி.மு.க.வில் பேரத்தை கூட்டுவது, அ.தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு தி.மு.க.வில் பேரத்தைக் கூட்டுவது.  இது அனைத்தும் பா.ம.க.வின் தேர்தல் தந்திரம் என்றும் விமர்சித்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாட்டாளி … Read more

அரசின் இலவசம் தேவைப்படாத, வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை வழங்கப்படும்: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: அரசின் இலவசம் தேவைப்படாத, வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அசல் குடும்ப அட்டையை குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்து கவுரவ குடும்ப அட்டையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுரவ குடும்ப அட்டை பெற்றவர்கள் சிறப்பு பிரஜைகளாக கருதப்பட்டு, அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது.

`சமூகநீதியில் மட்டுமல்ல; சூழலியல் நீதியிலும் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டும்'- முதல்வர் ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும். இனிமேல் மனிதநலன் என்ற ஒன்றே கிடையாது என்பதை உணர்ந்து கொண்டுதான் இந்த திராவிட மாடல் அரசு `ஒருங்கிணைந்த நலன்’ என்கிற கொள்கையை உறுதியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது” என இன்று நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தலைமை செயலகம் `காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான்’ காலநிலை … Read more

நோபல் பரிசு பெற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை: பெலாரஸ் நீதிமன்றம் அதிரடி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நோபல் பரிசு வென்றவர் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், மனித உரிமை ஆர்வலருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு (Ales Bialiatski), போராட்டங்கள் மற்றும் பிற குற்றங்களுக்கு நிதியுதவி செய்ததற்காக பெலாரஸில் உள்ள நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பியாலியாட்ஸ்கி மற்றும் பிற ஆர்வலர்கள் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டனர், தீர்ப்பு “பயங்கரமானது” என்று நாடுகடத்தப்பட்ட பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் … Read more

வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியானது… விடியோ

வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி பொங்கலுக்கு வெளியான படம் வாரிசு. அஜித் நடித்த துணிவு படத்துடன் திரையரங்குகளில் மோதிய இந்தப் படம் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நல்ல வசூலை அள்ளித்தந்தது. விஜய்-யின் முந்தைய படங்களை ஒப்பிடுகையில் எதிர்பார்த்த வசூல் இல்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் படங்கள் வெளியான நிலையில் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்த்த கலெக்சனை … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை (04.03.2023) பணி நாளாக அறிவிப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை (04.03.2023) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.