11வது சுற்றில் 52ஆயிரம் வாக்குகள் முன்னிலை! ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி

ஈரோடு:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 51,168 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில், அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிட்ட நிலையில், 7 வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. மேலும் 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட … Read more

14வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: 1,04,384 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 63,241  வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 1,04,384 வாக்குகள் பெற்று வெற்றி பெரும் நிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,666 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு; "சரியான நேரத்தில் நீங்கள் அளித்த உதவிக்கு நன்றி!"- என்ன நடந்தது?

1994ம் ஆண்டு ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மலினாவில் `பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்’ என்ற பெருமையுடன் கிரீடம் சூடியவர் சுஷ்மிதா சென் (46). பிரபல பாலிவுட் நடிகையாக இந்தி, தமிழ் எனப் பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழில் ‘ரட்சகன்’ மற்றும் ‘முதல்வன்’ போன்ற படங்களில் நடித்த இவர் 2010ல் ‘துள்க மில் காய (Dulha Mil Gaya)’ என்ற பாலிவுட் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பின், தான் தத்தெடுத்த … Read more

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர்; 2 இந்தியர்கள் உட்பட 5 பேர் கைது

அமெரிக்க எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 5 பேரில் 2 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது. 5 பேர் கைது கனடாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததற்காக அமெரிக்க எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 5 பேரில் இரண்டு இந்தியர்களும் அடங்குவர். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள அல்கோனாக் அருகே கடத்தல் முயற்சியின் போது டெட்ராய்ட் செக்டரைச் சேர்ந்த அமெரிக்க எல்லை ரோந்து முகவர்கள் ஐந்து வெளிநாட்டினரைக் கைது செய்ததாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் … Read more

12வது: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகள்…

ஈரோடு:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 398  தபால் ஓட்டுக்கள் … Read more

பொதுத் தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: பொதுத் தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வி இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஐஎம் வளாகத்தில் ராட்சத உடும்புகள்: வைரலாகும் வீடியோ| Giant iguanas on IIM campus: Video goes viral

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா ஐ.ஐ.எம். கல்வி வளாகத்தில் இரு ராட்சத உடும்புகள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோவை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோ மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண் மைய கல்வி நிலைய வளாகத்தில் எடுக்கப்பட்டது. வீடியோவில் இரண்டு ராட்சத உடும்புகள் மோதிக்கொள்ளும் வீடியோ … Read more

திருமணஞ்சேரி: களைகட்டிய ஓலைச்சப்பர வீதியுலா; பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபாடு!

பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமகப் பெருவிழா நடைபெற்றுவருகிறது. விழாவின் ஐந்தாம் நாள் உற்சவமாகத் தெருவடச்சான் என்னும் ஓலை சப்பரம் வீதியுலா நிகழ்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற, பழைமையான திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையைத் திருமணம் செய்து கொண்டதாகத் தலபுராணம் கூறுகிறது. திருமணஞ்சேரி திருமணத்தடை உள்ளவர்கள, இங்கு தினமும் நடைபெறும் … Read more

வீட்டிலேயே எளியமுறையில் பால்கோவா செய்யலாம்! எப்படி தெரியுமா?

பெரும்பாலும் அனைவரினதும் நாக்கும் இனிப்பான உணவிற்கே அடிமை. திருமணம், பண்டிகை, தொழில் ரீதியான சந்திப்புகள் என்று எந்த விடயமாக இருந்தாலும் கட்டாயமாக இனிப்புகள் இல்லாமல் இருக்காது. . அதில் ஒன்று தான் பால்கோவா. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.  இதனை கடைகளில் வாங்காமல் எளியமுறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம்.  அந்த வகையில் சுவையான ஒரு பால்கோவா செய்யலாம் என்று பார்க்கலாம். அதற்கு தேவையான பொருட்கள், பால் – 1 … Read more

இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்…

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.05 மணியளவில் பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை) மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 82 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுங்க்கம் காரணமாக, சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி … Read more