"இந்தியாவுக்கு சோசியலிசம் தேவையில்லை… ராம ராஜ்ஜியம் தான் தேவை!" – யோகி ஆதித்யநாத்

2023-24-ம் ஆண்டுக்கான உத்திரப் பிரதேச பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்திரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்,” சோசியலிசம் இல்லாமல் ராமராஜ்யம் சாத்தியமில்லை” என்று பேசினார். அதற்கு பதிலளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்த நாடு ராம ராஜ்ஜியத்தின் மூலம் மட்டுமே இயக்கப்படும். இந்த பட்ஜெட் ராமராஜ்ஜியத்தின் அடிக்கல்லாக இருக்கும். கும்ப மேளாவை ஒரு தனித்துவமான நிகழ்ச்சியாக மாற்ற பட்ஜெட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. … Read more

பிரித்தானியாவை உலுக்கிய தம்பதி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

பிரித்தானியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையுடன் மாயமான தம்பதி, இறுதியில் பொலிசாரிடம் சிக்கியுள்ள நிலையில், தற்போது அவர்களின் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் பிரைட்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது. இதே பகுதியிலேயே திங்களன்று, Constance Marten அவரது காதலர் Mark Gordon ஆகியோர் கைதானார்கள். @facebook மிக விரைவில் உடற்கூராய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும், குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் விரிவான பரிசோதனை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் … Read more

ஈவிகேஎஸ் தொடர்ந்து முன்னிலை: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை காலை 10மணி நிலவரம்…

ஈரோடு:  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில்  முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து திமுக கூட்டணியினர் தற்போதே பட்டாசு வெடித்து தங்களது கொண்டாடங்களை தொடங்கி விட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த … Read more

வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஐ.நா-வில் 'கைலாசா' பிரதிநிதிகள் – கலந்து கொண்டது எப்படி?!

நித்யானந்தா இந்தியாவின் பிரபலமான சாமியார்களில் ஒருவராக வலம் வந்தவர். பின்னர் வெளியான வீடியோ, அதை தொடர்ந்து கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற சர்ச்சைகளில் சிக்கினார். அவரை கைது செய்வதற்கு போலீஸார் தீவிரம் காட்டினர். இவற்றில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக சொல்லப்பட்டது. நித்தியானந்தா இதனிடையே மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கினார் என்றும், அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு, கொடியையும் வெளியிட்டார். மேலும் அரசியலமைப்பு, பாஸ்போர்ட், சின்னம் ஆகியவை அறிமுகம் … Read more

கொலை வழக்கில் சிக்கியவர் வீடு புல்டோசர் வாயிலாக இடிப்பு | The house of the accused in the case of murder was demolished by bulldozer

லக்னோ, உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் சிக்கியுள்ள சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரின் உதவியாளர் வீடு, ‘புல்டோசர்’ வாயிலாக நேற்று இடிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜில், கடந்த 2005ல் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ராஜு பாலை ஐந்து பேர் சுட்டுக் கொன்றனர். இவரை, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அதீக் அஹமது முன்விரோதம் காரணமாக கொன்றதாக கூறப்பட்டது. இந்தக் கொலை வழக்கின் முக்கிய … Read more

Doctor Vikatan: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

Doctor Vikatan: என் சகோதரி வீட்டில் காபி, டீ, பிரியாணி, கறிக்குழம்பு என எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுகிறார்கள். முதல்நாள் சமைத்த உணவுகளையும் இப்படித்தான் செய்கிறார்கள். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது சரியானதா? Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த பொதுமருத்துவர் ஆதித்யன் குகன் பொதுமருத்துவர் ஆதித்யன் குகன் | கோவை சமைத்த உணவை சூடுபடுத்துவதில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் விஷயம்… சமைத்த உணவை மீண்டும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….

ஈரோடு: பிப்ரவரி 27ந்தேதி நடைபெற்று முடிந்த ஈரோடு  கிழக்கு தொகுதியில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு ஜெயிக்கப்போவது யார் என்பது காலை 11மணி அளவில் தெரிய வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி   நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 … Read more

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நிதியமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளிடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 6-ம் தேதி நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.