கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி

சென்னை: கோவை கவுண்டம்பாளையத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் சேனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

"எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி…" பாதிக்கப்பட்ட மாணவர்

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “டீன் ஏஜ் காலகட்டத்தில் கோணங்கியை ஒரு காட்ஃபாதராக நினைத்துப் பழகினேன். ஆனால், அவர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், நான் மனச்சிதைவுக்கு ஆளானேன். அவரிடமிருந்து போன் அழைப்பு வந்தாலே பயமும் வந்துவிடும். இதனால், தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று தன் வாக்குமூலமாக போஸ்ட் ஒன்றைப் … Read more

சூப் பானையில் கொதித்த மொடல் அழகியின் மண்டை ஓடு., அதிர்ச்சியில் பொலிஸ்

கொலை செய்யப்பட்ட ஹொங்ஹொங் மொடலின் காணாமல் போன மண்டை ஓட்டை சூப் பானையில் பொலிஸார் கண்டுபிடித்தனர். காணாமல் போன மொடல் அழகி ஹொங்ஹொங்கை சேர்ந்த 28 வயது மொடலும் சமூக வலைதள பிரபலமுமான அப்பி சோய் (Abby Choi) கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நகரின் தை போ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதன பெட்டியில் அவரது சிதைந்த உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, வீட்டில் மின்சார ரம்பம், இறைச்சி … Read more

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு… ஆனால்…?

டெல்லி: முகேஷ் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு  உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தியஅரசுக்கு  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு – செலவை அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. நமது நாட்டில், குடியரசுதலைவர், பிரதமர், முதல்வர் உள்பட  முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான இசட், எக்ஸ், ஒய் வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதில் ஒவ்வொரு வகையான பாதுகாப்புக்கும், தனித்தனியான … Read more

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சென்னை வந்தடைந்தார்.

“அண்ணா நீங்க தயவு செய்து வாங்க..!" – திருமாவை வெளியே அழைக்கும் அண்ணாமலை

பா.ஜ.க சார்பாக, சென்னை பெருங்கோட்டத்துக்குட்பட்ட `அனைத்து சக்தி கேந்திர’ பொறுப்பாளர்களுடனும், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடனும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வழிகாட்டுதல்படி இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பா.ஜ.க-வுக்கும், வி.சி.க-வுக்கும் இடையிலான யுத்தம் கிடையாது. வி.சி.க-வுக்கும் அண்ணன் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம் இது. வி.சி.க-வினர் அண்ணன் தடா பெரியசாமியிடம் போட்டியிட்டு, அதன் பிறகு எங்கள் கிளை … Read more

ஆறு ஆண்டுகள் முறையான ஆவணங்களின்றி சுற்றித்திரிந்த ஆசிய நாட்டவர் ஜேர்மனியில் கைது

ஆறு ஆண்டுகளாக, முறையான ஆவணங்களின்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சுற்றித்திரிந்த ஆசிய நாட்டவர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற ஆசிய நாட்டவர் கடந்த ஞாயிறன்று, ரயில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது, ஆஸ்திரியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற 37 வயதான ஆசிய நாட்டவர் ஒருவர், Lindau என்ற இடத்தில் பொலிசாரிடம் சிக்கினார். அவரிடம் முறையான பாஸ்போர்ட் இருந்தும், முறையான குடியிருப்பு அனுமதி இல்லை. 2017ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து ஆறு … Read more

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் கண்டெடுக்கப்பட்ட 41000 மாத்திரைகள்! அதிர்ச்சி தகவல்..!

சென்னை:  விழுப்புரத்தில் பல ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அந்த ஆசிரமத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட 41ஆயிரம் மாத்திரைகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.